பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது போதும் SHOW US THE FATHER AND IT SUFFICES 59-08-19 Cleveland Ohio U.S.A. 1. மாலை வணக்கம். எப்பொழுதும் போலவே, இங்கே இருப்பதற்கு, மிகுந்த சந்தோஷமடைகிறேன். வியாதியஸ்தருக்காகவும், எளியவர்களுக்காகவும் ஊழியும் செய்வது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. உலகம் தேவையில் இருக்கிறது என்பதை தேவன் அறிவார்....... இப்பொழுதும், இன்றிரவு நாம் சுவிசேஷம் செய்யும் போது, அன்றொரு நாள் சகோதரன் கார்டன் (Gordon) சொன்னது போல கொஞ்சம் இன்றிரவு, கொஞ்சம் புத்துணர்ச்சி பெற்று பேசலாம் என்று நினைக்கிறேன். அடுத்து ...... நாளை மதியம் அது _ அது, "வாழ்கையின் கதை" என்பதை பற்றி பேச உள்ளேன். மேலும், யாருடைய ஆராதனையும் பாதிக்க படாமல் இருக்க நான் அதை நாளை மதியம் வைத்துள்ளேன். நீங்கள் அதில் கலந்து கொள்வீர்கள் என்றால் அது மிகவும் நேர்த்தியாக இருக்கும். மேலும் நாளை இரவு தேவன் நமக்கு ஒரு மிகவும் நேர்த்தியான சுகமளிக்கும் ஆராதனையை தருவார் என்று நான் நம்புகிறேன். அது ஒரு....... 2. அடுத்த வாரம் சில நாட்கள் தொடர்ந்து இங்கே இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். என்னால் இயன்ற வரை முயற்சி செய்கிறேன். நாங்கள் அதிக பட்சம் 3-லிருந்து 5 இரவுகள் தாங்குவதே மிகவும் கஷ்டம். மற்றும் இந்த முறை கூடுதலாக சில நாட்கள் இருக்கலாம் என்று முயற்சிக்கிறேன். காரணம் ...அதை தொடர சிரமமாக உள்ளது. [ஒலி நாடாவில் காலி இடம்] தேவன் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக. மற்றும் நான் சிறு பிள்ளைகளை நேசிக்கிறேன். அவள் அந்த பக்கமாக கடந்து சென்றாள். அவளுடைய சிறு இருதயத்தை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆமாம், என் இனிய இதயமே. அவளுக்கு கண் பிரச்சனை உள்ளது, அப்படி தானே தாயாரே. அவள் மிகுதியாக பயந்தும் இருக்கிறாள். அது சரிதான். ஆமாம் அன்னையே. நல்லது, இப்போது நான் என்ன சொல்கிறேனோ அதை நம்புங்கள். அதை செய்வீர்களா? நீங்கள் சுகம் பெற்றதாக சாட்சி சொல்லி வீட்டிற்கு செல்லவும். மற்றும் உங்கள் மகளும் சுகம் பெற்றதாக சொல்லுங்கள். நீங்கள் நம்புவீர்கள் என்றால், எல்லாமே உங்களுக்கு சரியாகி விடும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக சகோதரியே. இப்போது அந்த இனிமையான சிறிய பிள்ளை, கைகளை அசைத்துக் கொண்டு வருகிறாள். நல்லது எனக்கு சிறு பிள்ளைகள் என்றால் மிகவும் பிடிக்கும். இப்போது வேண்டாம் ......... எதையும் சந்தேகிக்க வேண்டாம் சகோதரியே. இப்போது நான் உங்களுக்கு முற்றிலும் அறிமுகமாகாத நபர் என்பது உங்களுக்கு தெரியும். உங்களை நான் அறியேன், உங்களை பற்றி ஒன்றுமே தெரியாது. நான் சொல்வது உண்மை என்றால், என்னை நம்புங்கள். மற்றும் தேவன் உங்களுக்கு சுகம் தருவார். நீங்கள் சென்று சாட்சி பகிருங்கள். நான் சுகமானேன் என்று சொல்லுங்கள். எல்லாம் முடிந்து போகும். மற்றும் உங்கள் குழந்தை சுகம் பெற்றுவிடும் மற்றும் எல்லாம் சரியாகிவிடும். 3. இப்போது நாளை இரவு நீங்கள் எல்லாரும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். சுகம் அளிக்கும் கூட்டத்திற்கு, நாளை இரவு வருவதற்கு முயற்சி செய்யுங்கள். மற்றும் அடுத்த வாரம் நமது........ பொதுவாக, நமது கூட்டங்களில் அதிக நெருக்கமாக இருக்கும், ஏனென்றால் அதிகம் அதிகமான ஆயிரக்கணக்கான மக்கள் இருப்பதினால் தான். ஆகையால் நாம் சுமூகமாக காரியங்களை, நடத்துவதற்காக அநேக அட்டைகளை பிடித்து வைக்க முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த கூட்டங்களில் அதிகமான ஜனங்கள் இல்லை. நான் என்ன உணருகிறேன் என்றால், அடுத்த வாரம் நாம் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவோம் என்றால், நம்மிடம் ஒரு ஜெப அட்டை கூட இருக்காது. நாம் எல்லாருக்காகவும் ஜெபிப்போம். எல்லோரும் மேலே வந்து அவர்களுக்காக ஜெபிக்கட்டும். மற்றும்-மற்றும், மற்ற கூட்டங்களில் நடைபெற்ற காரியங்களை போதுமான அளவிற்கு பார்த்தும், கேள்விப்பட்டும் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இன்னும் நான் - நான் ஒரு வழியை தேட முயற்சிக்கிறேன்........ [ஒலி நாடாவில் காலியிடம்] தேவன் ஒவ்வொருவரையும் எப்படியாவது அழைத்து, சுகம் கொடுக்க வேண்டும் என்பதை தான் நான் பார்க்க விரும்புகிறேன். 4. யாரோ ஒருவர் சொன்னார்கள், இங்கே யாரோ ஒருவர் என்னுடைய மற்ற கூட்டங்களில் அநேக - அநேக முறை வந்தும், ஜெப வரிசையில் வர முடியாமல் போய்விட்டது என்று அப்படிப்பட்ட காரியத்திலிருந்து தான் நான் வெளியே வர முயற்சிக்கிறேன். எல்லோரும் ஜெபிக்கப் பட்டனர் என்று சொல்லக் கூடிய கட்டத்திற்குள் எவ்வளவு சீக்கிரம் வர முடியுமா அவ்வளவு சீக்கிரம் வர முயற்சிக்கிறேன். அற்புதங்களும் அடையாளங்களும் மகிமைக்குரியது தான். மேலும் நான் குப்பியோவிலும் (kuopio) மற்ற அநேக இடங்களிலும் முயற்சித்தேன். மற்றும் அது மிகவும் அற்புதமாக இருந்தது. ஆனால், இதுவரைக்கும் அப்படி பட்ட ஒரு நேரத்தை இன்னும், அமெரிக்காவில் நான் காணவில்லை. தேவனுடைய சித்தம் என்னவென்றும், நான் என்ன செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதை அறிய நான் முயற்சிக்கிறேன். அதன் பிறகு, என்னால் முடியும் என்றால், தேவனுடைய பரிபூரண சித்தத்தின்படி நடக்க நான் விரும்புகிறேன். எல்லா காரியமும் உதவி செய்வதற்காக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். 5. இப்போது, எல்லாரும் பயபக்தியாக இருங்கள், உங்களுடைய முழு இருதயத்துடன் நம்புங்கள். மற்றும் இப்பொழுது, சில அருமையான ஜனங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அதாவது, ஒரு குறிப்பிட்ட பெண், ஒரு வேளை அவள் இங்கே இல்லாமல் கூட இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். ஒரு சில நாட்களுக்கு முன்பு அவள் எனக்கு கொஞ்சம் துணிகளை கொண்டு வந்தாள். (என்னுடைய சிறு பையன் இங்கே பேசிக் கொண்டிருக்கிறான்) இந்த பெண் ஒரு ஏழையாக இருந்தாள், அது எல்லாம் சரி. நான் - நான் அந்த துணிகளை பார்த்தேன். மற்றும் நான் _ நான் அதை ரசித்தேன். ஆகையால் அதை நான் _ நான் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. மற்றும் யாராவது எனக்கு ஏதாவது பொருள் கொடுத்தால் நான் நானே அதை வாங்கியதாக இருந்தாலும், அதை காட்டிலும் மில்லியன் முறை அதை பாராட்டுவேன். ஒருவேளை அந்த பெண் இங்கே எங்கேயாகிலும் இருந்தால், அந்த பெண்மணிக்கு என் நன்றியை தெரிவிக்கிறேன். தேவன் தாமே அவளை ஆசீர்வதித்து, அவளுடைய இதயத்தின் வாஞ்சயை நிறைவேற்றுவாராக. மற்றும் நான் பாராட்டுகிறேன்....... யாரோ ஒருவர் ஒரு பெட்டி முழுவதும் கை குட்டைகளையும், மற்றும் பல பொருட்களையும் நேற்று அனுப்பினார்கள். மற்றும் நான் அதை பாராட்டுகிறேன். மற்றும் அந்த ஆடைகளை நான் மோசமான இடங்களில் உடுத்திக் கொள்ள மாட்டேன் என்று தேவன் அறிவார். நான் சுவிசேஷத்திற்காக, அதை உபயோகிப்பேன். என்னால் தெரிந்த எல்லாவற்றையும், மற்றவருக்கு எப்படி செய்ய வேண்டுமோ, அதை செய்ய நான் அறிந்திருக்கிறேன். மற்றும் நான் அதை பாராட்டுகிறேன்.....?.... இப்போது, ஒரே ஒருகாரியம் உங்களுக்கு சொல்வேனானால், "சகோதரியே, சகோதரனே, யார் அந்த பொருட்களை கொடுத் தார்களோ சரி தேவன் உங்களுக்கு வெகுமதியை தருவார்." ஆமாம் ஐயா. 6. மற்றும் நேற்று மாலையில் அதை அறிவிக்கலாம் என்று நான் நினைத்தேன் "நல்லது எனக்கு இது....இருந்தது.." ஒருவேளை அவள் இங்கே இருந்திருந்தால் நான் அதை மறந்துவிட்டேன். நான் அதை பாராட்டுகிறேன். யாராவது.......ஏதோ ஒரு பொருளை உங்களுக்கு கொடுத்தால்.....நீங்களும் அதை போலவே உணருவீர்கள் அல்லவா? ஒருவேளை ஏதோ ஒரு பொருளை உங்களுக்கு கொடுத்தால்.... மற்றும் எனக்கு ஒரு.......ஒரு சிறந்த நபர் உண்டு. எனக்கு வெளியே செல்வதும், துப்பாக்கிகளும், கத்திகளும், வேட்டையாடுதலும் மிகவும் விருப்பம் என்று நீங்கள் அறிவீர்கள். அங்கேதான் நான் ஒரு சிறு பையனாக, காட்டுக்குள் அலையும் போது தேவனை கண்டு கொண்டேன். மற்றும் நான் வேட்டையாட எப்பொழுதும் விரும்புவேன். மற்றும் யாரோ ஒருவர்.......யாரோ ஒரு ஆள் இவ்வளவு நீளமுடைய ஒரு பழைய 22 துப்பாக்கியின் பீப்பாய் ஒன்றை கொடுத்தார். நான் ஒரு துண்டு பலகையை எடுத்து அதை பயன்படுத்தினேன். ஏன், அதை நான் விற்பனை செய்யமாட்டேன். அதின் விலை வெறும் பத்து பைசா தான், ஐம்பது சென்ட் அவ்வளவு தான். மேலும் நான் அதை சுத்தியால் தட்டி, அதில் ஒட்ட வைத்தேன். ஆனால் அது எனக்கு ஆயிரம் டாலர் மதிப்புள்ளதாக இருக்கிறது. அந்த வயதான சகோதரன் அதை வைத்திருந்ததை எனக்கு ஞாபகம் இருக்கிறது. மற்றும் எனக்கு ......எதுவாக இருந்தாலும் சரி, யார் கொடுத்தாலும் சரி அதை நான் பாசமாய் ஏற்றுக்கொள்ளுவென். இப்பொழுதும் அது.......[ஒலி நாடாவில் காலி இடம்] நாம் வியாழன் அல்லது வெள்ளி வரைக்கும் சரியாக கூட்டங்களை நடத்த போகிறோம்.அது சரிதானே சகோதரனே.......?.....என் வாழ்கையிலேயே, இந்த பட்டணத்தில் நடத்திய கூட்டங்களை காட்டிலும் வேறு எந்த கூட்டமும் இவ்வளவு நீடித்தது இல்லை. இது தான் மிக நீண்ட காலம் நடைபெறும் கூட்டம் என்று நான் யூகிக்கிறேன். மற்றும் நிச்சயமாக மக்களுக்குள் இதை காட்டிலும் அதிக ஆன்மீக ஒத்துழைப்பை வேறு எந்த கூட்டத்திலும் பார்க்க வில்லை.......அருமையான விசுவாசத்தை சரியாக இந்த பட்டணத்தில் காண்கின்றேன். தேவன் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. நீங்கள் ஆச்சரியப்படும் விதத்தில், இங்கே சரியாக இப்போது நின்றுக்கொண்டு இருக்கும் பொழுது, ஒரு காரியத்திற்கு பிறகு மற்றொரு காரியம் நடப்பதை இந்த கூட்டத்தில் காணலாம். (அது சரிதானே) என்ன நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு மட்டும் ஜனங்களை தங்களது முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் இதை நம்பும்படி கிடைத்தால், அவர்கள் அதை அப்படி செய்தால், தேவன் எப்படி செய்கிறார் .....என்பதை பார்க்க அது அற்புதமாக இருக்கும். இப்பொழுது, அநேக நேரங்களில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்று நீங்கள் பார்க்கலாம். ஆனால் _ ஒரு மனிதன் சுகம் பெற்றார் என்று சொல்ல, என்னால் முடியாது. என்னால் சொல்ல முடியாது. இப்போது, தேவன் என்னிடம் அதை காண்பிக்காத பட்சத்தில் எனக்கு சொல்லமுடியாது. எனக்கு அவர்களுக்கு என்ன இருக்கிறது மற்றும் எல்லா காரியமும் சொல்ல முடியும், இங்கே அந்த சிறு பெண்ணை போல. அந்த மனிதன் எப்படி........ என்று அவளுக்கு சொல்லமுடியும். ஒரு வேளை என்னிடம் இருந்திருந்தால்........ 7. அந்த சிறு புது பையன் என்று நினைக்கிறேன். நான் நம்பமாட்டேன் ..இது தான் முதல் முறையாக_ அவன் முதல் முறையாக இங்கே இருக்கிறான், அப்படிதானே? இதற்கு முன்பு இங்கே இருந்திருக்கிறாயா? மூன்றாம் இரவு இதற்கு முன்பு நான் அவனை பார்த்ததே இல்லை......... இப்போது, சற்று.......பெற்றோரே, நீங்கள் விசுவாசிகளா? உங்கள் முழு இருதயத்தோடே நம்புகிறீர்களா? இப்போது, நீங்கள் என்னை நம்புவீர்கள் என்றால், நான் அந்த குழந்தையை பற்றி சொல்லுவேன். ஆனால் அது இப்போது சுகமாகிக் கொண்டிருக்கிறது. நான்........நான் தேவன் சொல்லும் வரைக்கும் நான் ஒன்றும் சொல்லக்கூடாது. ஆமாம், நான் அந்த குழந்தையை பார்க்கிறேன். அதற்கு வாதம் இருப்பது போல இருக்கிறது. ஆனால் அது கிடையாது. அந்த குழந்தை பிறக்கும் போது, அதற்கு அடிப்பட்டது. அது சரிதானே? அது தான் அப்படி செய்தது அல்லவா? அது நல்லது......?.... இப்பொழுது, நமக்குள்ளே ஏதோ ஒரு விதமான இணைப்பு உள்ளது. உங்கள் இரண்டு பேர்களுக்கும் தெரியுமா? நீங்கள் உண்மையிலேயே முன்பின் அறியாதவர்கள் போல உணருகிறீர்கள். அப்படி தானே? பாருங்கள்? நீங்கள் அந்த ஆவியை தொடர்பு கொண்டீர்கள். இப்பொழுது, உண்மையாக பயபக்தியுடன் இருங்கள். உங்கள் முழு இருதயுத்துடன் நம்புங்கள். நீங்கள் எதை கேட்கிறீர்களோ அதை பெற்றுக் கொள்வீர்கள். உங்களுக்கு நம்ப முடியுமானால்.......ஆனால் முதலாவது காரியம் என்ன வென்றால், விசுவாசிப்பது தான். நீங்களும், நானும் விசுவாசிக் கிறோம். நான் அந்த காட்சியை.......லிருந்து கண்டேன் என்று சொன்னேன். 8. அங்கே நேராக ஒரு சிறு பெண்மணி ஒரு வெள்ளை ஆடையை அணிந்திருக்கும் சிறுமியுடன் உட்கார்ந்துகொண்டு இருக்கிறாள். நான் ஏதாவது சொல்லவேண்டும் என்று உங்களால் இயன்ற வரைக்கும் நீங்கள் முயற்சிசெய்கிறீர்கள். அப்படிதானே, சகோதரியே? உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? மற்றும் நான் இந்த நடைமேடையில்சற்று முன் நடக்கும் போது, நீங்கள் ஜெபிக்க தொடங்கி விட்டீர்கள் அல்லது ஏதோ ஒன்று செய்தீர்கள். அப்படிதானே? காரணம் நான் திரும்பி பார்க்கும் போது, நீங்கள் ஜெபித்து கொண்டோ அல்லது ஏதோ அப்படி செய்துக் கொண்டிருந்தீர்கள். உங்களுக்கு என்ன பிரச்சனை உண்டு என்று நான் சொல்லவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தீர்கள். அது சரிதானே? ஒரு சிறு கதையை உங்களுக்கு சொல்ல போகிறேன். நீங்கள் ஒரு வாலிப பெண். உங்களை பார்க்கும் போதே எங்களுக்கு தெரிகிறது. ஆனால், ஒரு முறை ஏறக்குறைய உங்களுடைய சுபாவபடியே ஒரு பெண் வேதாகமத்தில் இருந்தாள், மேலும் அவளை தேவன் ஆசீர்வதித்தால், அவள் அவருக்கு என்ன செய்ய போகிறாள் என்று தேவனிடம் வாக்குகொடுத்தாள். அது உண்மை தானே? ஓரு நாள், அவள் ஆலயத்துக்கு ஜெபிக்கும்படி சென்றாள். (அது சரிதானே?). மற்றும் அந்த ஆசாரியன் தவறாக அவளை நினைத்தான். மற்றும் அவளுக்கு இருக்கும் நிந்தையை நீக்கும்படி அவள் அவ்வளவு உத்தமத்தோடு ஜெபித்ததினால் அவள் தவறாக என்னப்பட்டாள். அது சரிதானே? மேலும் அந்த ஆலயத்தின் ஆசாரியன் வெளியே வந்து சொன்னார் "தேவன் உன்னுடைய வாஞ்சையை நிறைவேற்றுவார்." மற்றும் அதிலிருந்து ஒன்பது மாதம் கடந்த பின், அவளது வாஞ்சை நிறைவேற்றப்பட்டது. (அது சரியாகத்தானே இருந்தது.) ஒரு சிறு குழந்தையை பெற்றெடுத்தாள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார் சகோதரியே. தேவன் நீங்கள் விரும்பினபடியே அங்கேயே தருவார். கவலைப்படாதீர்கள் தாயாரே, சீக்கிரத்தில் அவள் ஒரு குழந்தையை அரவனைப்பாள் என்று நான் நம்புகிறேன். இப்போது விசுவாசம் வைத்து, உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். 9. இந்த வரிசையின் முடிவில் இருக்கும் ஜனங்களே, இந்த பக்கமாக பார்த்து, உங்கள் முழு இருதயத்தோடும் நம்புங்கள். இதோ இங்கே ஒரு விதமான கணத்தோடு உட்கார்ந்துகொண்டு இருக்கும் பெண்ணே சற்று முன்பு தான், தேவன் தம்முடைய ஆவியினால் என்னை தொடர்பு கொணடார். சகோதரியே உங்களுக்கு என்ன பிரச்சனை என்று நான் சொன்னால்....எனக்கு தெரியும்.......ஆமாம், நான் இப்போது பார்க்கிறேன். இதோ அது என்ன வென்று சொல்கிறேன். உங்களுக்கு மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளது. அது சரிதானே? கடினமான மூச்சு திணறல் உங்களுக்கு நன்றாக மூச்சு விடமுடியவில்லை. நீங்கள், ஒரு வேளை நான் சொல்வது போல் செய்வீர்கள் என்றால், மற்றும் நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நம்புவீர்கள் என்றால்.....?..... உங்களுக்கு நீங்கள் எனக்கு அந்நியர் என்று தெரியும். தேவனை தவிர, இந்த உலகத்தில் எந்த வழியிலும் அது எனக்கு தெரிய முடியாது. நீங்கள் அதை நம்புகிறீர்களா? நீங்கள் சென்று, சுகம் பெற்றுவிட்டதாக சாட்சி கூறுவீர்களா? ஜனங்களுக்கு நீங்கள் சுகம் பெற்றதாக சொல்லுவீர்களா? தேவன் அதை அருளுவார். உங்களுக்கு அடுத்தபடியாக ஒரு மனிதன் வெள்ளை மேல் சட்டையை அணிந்து உட்கார்ந்துகொண்டு இருக்கிறார். அவருக்கும் பிரச்சனை உண்டு, அது சரிதானே ஐயா? இப்போது எனக்கு தெரியாது. உங்கள் பிரச்சனை உங்கள் கைகளில் உள்ளது. இல்லை இல்லை, அப்படி இல்லை. உங்களுக்கு ஒன்று, ஒரு புரோஸ்டேட் வீக்கம் பிரச்சனை உண்டு. மற்றும் உங்களுக்கு உங்களுடைய........பிரச்சனை உண்டு. இல்லை உங்களுக்கு நுரையீரல் உழர்சி உண்டு. அது தான் அது. அது சரிதானே, ஐயா? அது உங்கள் இரண்டு பக்கத்திலும் இது போல......?.....இருக்கிறது. அது சரி தான். நான் தேவனுடைய தீர்க்கதரிசி என்று நம்புவீர்களா? நீங்கள் எனக்கு அந்நியன் என்பதை அறிவீர்கள். நல்லது. உங்களுக்கு நுரையீரல் அழற்சி இருந்ததாகவே மறந்து செல்லுங்கள். உங்களுக்கு சுகம் கிடைத்ததை சாட்சி கூறுங்கள். நீங்கள் எதை கேடீர்களோ அது உங்களுக்கு கொடுக்கப்படும். 10. தேவன் உங்களுக்கு இரக்கம் காட்டுவாராக. உங்களுடைய சிறுமிக்கு நரம்பு தளர்ச்சியும், கண்களில் பிரச்சனை உண்டு, அப்படிதானே சகோதரியே. விசுவாசியுங்கள், அவள் அதிலிருந்து விடுதலை பெற்று, நலம் பெறுவாள். ஆமென். அந்த சிக்களான புற்றுநோயை உடைய சகோதரியே, நீங்களும் நம்புகிறீர்களா? எல்லாமே உங்களுக்காக செயல்படும் அது உண்மை தானே. ஆமாம் ஐயா. எல்லாம் நல்லது அந்த வெள்ளை நிற கழுத்துப் பட்டையோடே உட்கார்ந்து கொண்டிருக்கும் அந்த பெண்மணியே உங்களுக்கு சிக்கல் உண்டு. உங்களுக்கு புற்றுநோய் உண்டு அப்படித்தானே. எல்லாம் சரி. இயேசு உங்களை சுகமாக்குகின்றார், அதிலிருந்து நீங்கள் விடுதலையானீர்கள். நீங்கள் வீட்டுக்கு செல்லலாம். மற்றும் எப்படி விடுதலையாக இருக்க விரும்புகிறீர்களோ அப்படியே வாழலாம். அந்த சிறுமியுடைய கண்களை குறித்து கவலைப்படாதீர்கள் சகோதரியே மற்றும் உங்களுடைய நரம்பு தளர்ச்சியை குறித்தும் கவலைப்படாதீர்கள். அவை எல்லாம் உங்களை விட்டு சென்றுவிட்டது மற்றும் நீங்கள் நலமாகி விடுவீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இரக்கம் பாராட்டுவாராக, சகோதரியே. விசுவாசமாய் இருங்கள். நம்பிக்கையோடே இருங்கள். எல்லாரும், இந்த வழியாகவே, உங்கள் கண்களை வைத்து நம்புங்கள். விசுவாசம் வையுங்கள். எல்லாம் சரி, ஐயா, அங்கே அரைக்கை மேல் சட்டையை அணிந்து கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கு, கண்களிலும் காதுகளிலும் பிரச்சனை உண்டு, அது சரிதானே. நீங்கள் என்னை நம்புவீர்களா? நல்லது நீங்கள் சுகம் பெற்று விட்டீர்கள் என்பதை சாட்சி பகிருங்கள், மற்றும் தேவன் உங்களை சுகப்படுத்துவார். மற்றும் நீங்கள் நம்பினால். இப்பொழுதே தேவன் உங்களை சுகப்படுத்துவார் . இங்கே எந்த இடத்திலையும் இருக்கும் என் அருமையான சகோதரனே, சகோதரியே தேவன் இங்கிருக்கிறார். அவர் தன்னை வெளிப் படுத்துகிறார்...... 11. நாம் இப்பொழுது ஜெபிக்கலாம். எங்கள் பரலோக பிதாவே ,உம்முடைய அநேக ஜனங்கள் உபத்திரவத்தில் இருக்கிறார்கள். ஆனால் வேதம் "அவை எல்லாவற்றிலிருந்து தேவன் அவர்களை விடுதலையாக்குகிறார்" என்று சொல்கிறது. ஓ, இந்த சபையார் எல்லோரிடமும் ஒருவரிலிருந்து மற்றவரிடம் நீர் பேசுவதற்கான நேரம் எப்படி போதுமானதாக இருக்கும் என்று வியக்கிறேன். தேவனே, இங்கு நின்றுகொண்டிருக்கும் உமது ஊழியக்காரன், உலகப்ரகாரமாக அல்லாமல், ஜனங்களோடு ஒரு ஆன்மீக தொடர்போடு இருக்கிறார் என்பதை நிச்சயமாக இந்த ஜனங்கள் அறிவார்கள். மற்றும் நான் அவர்களுக்கு, உம்முடைய பிரசன்னம் வெளிப்படும்படி, மகிமையிலிருந்து உம்முடைய தெய்வீக அன்பளிப்பு அனுப்பப்பட்டது என்று ஜனங்களுக்கு சொல்ல நான் முயற்சிக்கிறேன். நீங்கள் நாத்தன்வேலிடம் சொன்னது. போல "பிலிப்பு உன்னை அழைப்பதற்கு முன்பே நீ மரத்தின் கீழ் இருப்பதை நான் அறிந்தேன்." நீர் அந்த பெண்ணிடம் அவளுடைய பாவத்தை எடுத்து சொன்னீர். அந்த கழுதை குட்டி எங்கு கண்டுபிடிக்கவேண்டும் என்று சொன்னீர். வாயில் காசு இருந்த அந்த மீன் எங்கு இருக்கிறது என்று உமக்கு தெரியும். உமக்கு எல்லாமே தெரியும், மற்றும் நாங்கள் உம்மை சேவிக்கும் போது அதை எங்களுக்கு வெளிப்படுத்துகிறீர். மற்றும் "நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன், நான் செய்கிற இந்த காரியத்தை காட்டிலும் பெரிய காரியம் நீங்கள் செய்வீர்கள்" என்று நீர் சொன்னதை நாங்கள் அறிவோம். மற்றும் உமது ஆவியானவர் இன்றிரவு இங்கே வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார். 12. பிதாவே, நான் வார்த்தையை பேசும் போது எனக்கு உதவி செய்தருளும். இந்த வார்த்தையானது இப்போது வல்லைமையோடு சென்று, இந்த சபையாரிடத்திலிருந்து முடவர் நடப்பதையும், குருடர் பார்வையடைவதையும், செவிடர் கேட்பதையும், ஊமை பேசுவதையும் காண செய்யும். இங்கிருந்து அவர்கள் செல்லும் போது, எல்லோரும் கெம்பீரித்து சந்தோஷமாக சத்தம் போட்டுகொண்டு செல்லட்டும். மற்றும் நாளை ஒரு புதிய நாளாக இருக்கட்டும், விடியும் போது ,குருடர்கள் பார்வை அடையவும், சேவிடர்கள் கேட்கும்படியாகவும், புற்று நோய்கள் குணமடையவும், மாம்சத்தின் சோர்வுகள் நீங்கி ,இயேசுவின் மேல் விசுவாசம் ஆட்கொண்டு ஆளுகை செய்யட்டும் . எல்லா சந்தேகங்களும் மறைந்துபோகும். இதை அருளும் பிதாவே. அவருடைய ஜனங்களாகிய உங்களை ஆசீர்வதிக்கிறேன். வாரத்தின் கடைசியில் கூடிவந்திருக்கும் நாங்கள், உம்மை சேவிக்கவும், உம்முடைய நாமத்தை துதிகளாலும், நன்றியாலும் போற்ற வந்திருக்கிறோம். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 13. இப்போது நான் சில கணம் பேசும் போது, எல்லோரும் ஊக்கமாக இதை கேட்க விரும்புகிறேன். சந்தேகிக்காமல் அதை.....நம்புவதற்கு விசுவாசம் வையுங்கள். வேதாகமம் வைத்திருக்கும் உங்களிடம், பரிசுத்த யோவான் 14 -ம் அதிகாரத்தை வாசிக்க நான் விரும்புகிறேன். சில கணங்கள் மாத்திரம் நான் பேச விரும்புகிறேன். மற்றும் இன்றிரவு, தேவன் நமக்கு ஒரு திருப்புமுனை வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். அது சபையார் மேல் உள்ளது என்று நான் நம்புகிறேன். நீங்கள் இப்போது நலமாக உணருகிறீர்கள், அப்படிதானே சகோதரனே சகோதரியே முன்னால் உட்கார்ந்திருக்கும் அந்த சிறிய பெண்ணே, இப்போது விசுவாசியுங்கள். உங்கள் முழு இருதயத்தோடே விசுவாசியுங்கள். எல்லாம் சரி. உங்கள் இருதயம் கலங்காத இருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாய் இருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள் என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்கு சொல்லி இருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம் பண்ண போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணின பின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக் கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள்; இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரைக் கண்டும் இருக்கிறீர்கள் என்றார். பிலிப்பு அவரை நோக்கி: ஆண்டவரே பிதாவை எங்களுக்கு காண்பியும், அது எங்களுக்கு போதும் என்றான். 14. ஒரு சிறு காரியத்திற்காக நான் அதை சிறு கணங்களுக்கு உபயோகிக்கலாம் என்றிருக்கிறேன். அதற்கு பிறகு, சுகமளிக்கும் ஆராதனைக்கு வருவோம். சற்று அந்த வார்த்தையை பற்றி உங்களிடம் பேசுவதற்காக "பிதாவை எங்களுக்கு காண்பியும், அது எங்களுக்கு போதும்" என்றான். வேறு வார்த்தையில் சொல்லுவோம் என்றால் "பிதாவை எங்களுக்கு காண்பியும் அது எங்களை திருப்தி படுத்தும்" என்றான். இப்போது எனக்கு வேண்டியது.......இங்கே எத்தனை பேர் உண்மையாகவே தேவனை பார்க்க விரும்புகிறீர்கள்? நல்லது "பிதாவை எங்களுக்கு காண்பியும் அது எங்களுக்கு போதுமானதாக இருக்கும்." இப்போது அது........முடியுமானால், தேவனை எப்படி பார்க்கலாம் என்றும், தேவனை பார்ப்பதற்கு சில வழிமுறைகளை சீக்கிரமாக உங்களிடம் பேச நான் முற்படுகிறேன். மற்றும் ஒருவேளை...... ஒருவேளை எனக்கு முடியுமானால், வேதாகமத்தின் மூலமாகவோ, அற்புதத்தினாலும், அறிகுறியினாலும், தேவன் யார் என்றும் மற்றும் இப்போது எங்கே இருக்கிறார் என்றும் உங்களுக்கு நிரூபிப்பேன் என்றால், என்னை நம்புவீர்களா? நீங்கள் என்னை நம்புவீர்களா? நல்லது "பிதாவை எங்களுக்கு காண்பியும் அது எங்களுக்கு போதுமானதாக இருக்கும்." 15. ஒரு நான்கு வழியில் தேவனை பார்க்கலாம் என்று பேசவிருக்கிறேன். அதற்கு பிறகு கடைசி பகுதியில், நாம் எங்கே தேவனை பார்க்கலாம் என்று நாம் தீர்மானிப்போம், என்னால் முடியுமென்றால் இன்றிரவு ஆவியின் உதவியினாலே நான் அவரை நான்கு வித்தியாசமான முறையில் உங்களுக்கு காண்பிப்பேன். இப்போது, முதலாவது தேவனை பற்றி பேசவேண்டும் என்றால், அவருடைய அண்டசராசரத்திலிருந்து பேசலாம். மற்றும் தேவனை அவருடைய வார்த்தையிலிருந்தும், தேவனை அவருடைய குமாரனிலிருந்தும், மற்றும் தேவன் இங்கே அவருடைய மக்களிலிருப்பதையும் பேசலாம். தேவன் அவருடைய அண்ட சராசரத்தில் இருப்பதை நான் உங்களிடம் காண்பிக்க விரும்புகிறேன். அவருடைய வார்த்தையில் இருப்பதை காண்பிக்கிறேன். அவருடைய குமாரனில் இருப்பதை காண்பிக்கிறேன், அதன் பின் இங்கே, தேவனை அவருடைய ஜனத்தில் இருப்பதை காண்பிக்கிறேன். அப்போது அது நிச்சயமாக யாராக இருந்தாலும் திருப்திபட வேண்டும். 16. நாம் நம்முடைய தலைகளை கவிழ்ந்திருப்போம். நித்திய பிதாவே, ஜீவனத்தின் அதிபதியே மற்றும் எல்லா நல்ல ஈவுகளையும் அருளுபவரே, உம்முடைய நேசக்குமாரன் இயேசுவிலிருந்து சொன்ன வார்த்தையை நாங்கள் இப்போது திறந்து வாசிக்கும் போது, அது நித்திய காலமாக உண்மை என்பதை அறிந்திருக்கிறோம். மற்றும் அவை முடிவில்லாதவை. தேவனுடைய வார்த்தையை தவிர வேறொன்றும் உண்மையாக இருப்பதில்லை. மற்றும் நாம் அதை நேசிக்கிறோம். விசுவாசம் கேட்பதினால் வரும், மற்றும் வார்த்தையை கேட்பதினால் வரும். மற்றும் இப்போதும் பிதாவே, ஜனங்களை இதில் உறுதிபடுத்தும், திடமான அஸ்திபாரமாகிய வார்த்தையின் மேல் அவர்கள் நிலைத்து நிற்கவும், உதவி செய்யும். அதாவது எந்தவிதத்திலாவது சாத்தான் அவர்களிடம் வந்தால், அவர்கள் வார்த்தையினிடத்தில் ஓடுவார்கள். அது எழுதப்பட்டிருக்கிறது. இப்பொழுதும் பிதாவே இன்றிரவு எங்களுக்கு உதவி செய்து, வார்த்தையை திறந்து தாரும். மற்றும் எங்களுக்கு புரிந்துகொள்ளும் தன்மையை தாரும். பேசுகிற உம்முடைய தாசனின் உதடுகளை விருத்தசேதனம் செய்து, கேட்கின்ற ஜனங்களின் இருதயத்தையும் விருத்தசேதனம் செய்யும். அதனால் வார்த்தையானது அந்த செழிப்பான நிலத்தில் விழுந்து, நூறத்தனையாய் பலன் கொடுக்க உதவட்டும். மேலும் இன்று இரவுக்கு பிறகு எங்களுக்குள்ளே பலவீனமானவர் என்று ஒருவர் கூட இல்லாமல் இருப்பார்களாக. இன்றிரவோடே அது முடியட்டும், எல்லோரும் விசுவாசமாக இருக்கட்டும் தகப்பனே. இதை அருள்செய்யும். மற்றும் இப்போது, பரிசுத்த ஆவியானவர் தாமே தேவனுடைய காரியங்களை எடுத்து, சரியாக ஜனங்களிடம் அளிக்கட்டும். தேவகுமாரனுடைய நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 17. அது வயதானவருடைய குரல்: "நான் மட்டும் தேவனை கண்டு பிடிப்பேனானால்" எல்லா காலங்களிலேயும், ஜனங்கள் ஆராதிக்கவே பிறந்திருக்கின்றனர். நீங்கள் எதையாகிலும் ஆராதிப்பீர்கள். ஒருவேளை அது உங்கள் குழந்தையாக இருக்கலாம், உங்களுடைய வாகனமாக இருக்கலாம். உங்கள் வீடாக இருக்கலாம், உங்கள் வேலையாக இருக்கலாம், ஒருவேளை உங்கள் ஆலயமாக கூட இருக்கலாம். அது எதுவும் வேலை செய்யாது. நாம் ஆலயத்தை ஆராதிக்கவில்லை; தேவனை ஆராதிக்கிறோம். அந்த குகை மனிதன், இந்தியர்கள், அமெரிக்க இந்தியர்கள் சூரியனை வணங்குவதாக நாம் கண்டுகொண்டோம். மற்றும் அவனுக்கு வேட்டையாடுவதற்கான ஒரு நல்ல இடம் கிடைத்தது என்று சந்தோஷமாக இருந்தான். ஒருவன் மரித்துப் போவான் என்றால், அவர்கள் சோளம் மற்றும் அது போன்ற காரியங்களை போட்டு, அவனுடைய வில்லும் அம்புவையும் அதனுடனே வைத்து, அவனை ஒரு படகில் ஏற்றி கடலை கடந்து, ஏதோ ஒரு இடத்திற்கு அனுப்பி அங்கு, அவன் சந்தோஷமாக வேட்டையாடும் படியான இடத்தை கண்டுபிடித்து, அங்கே அனுப்புவர். அவன் வாழ்வதற்கு தேவையான எல்லா பொருட்களையும் அங்கே பெற்றுக் கொள்வான். மனித இதயத்திற்குள், ஏதோ ஒரு இடத்தில் தொழுது கொள்வதற்கான ஏதோ ஒன்று இருக்கிறது. இந்த உலகத்தில் ஒரு மனிதன் கூட தொழுது கொள்ளாமல் இல்லை. அவன் ஏதோ ஒன்றை ஆராதிக்கிறான். 18. கிணற்றண்டையில் இருக்கிற அந்த ஸ்திரீயிடம், இயேசு சொன்னார் நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. இப்போது தொழுதுகொள்ளுதலை தான் நம் எல்லோரும் விரும்புகிறது இல்லை. தொழுதுகொள்ளுவதற்கு ஒரு வழி கொடுக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கு அது தெரியுமா? பாருங்கள்? தொழுது கொள்வதற்கு ஒரு வழி உண்டு. சரியான வழியில் தொழுது கொள்ளவதும், தவறான வழியில் தொழுது கொள்வதும் ஆகிய இரண்டு வழிகள் உண்டு. எந்த வழியில் தேவனை தொழுது கொள்ள வேண்டும் என்று நான் முயற்சிக்கவில்லை. ஆனால் தேவனை அணுகுவதற்கு ஒரு வழி உண்டு என்பதை உங்களுக்கு சொல்கிறேன். மற்றும் அந்த அருளப்பட்ட வழியில் நீங்கள் வரவில்லை என்றால் நிச்சயமாக தேவனை கண்டுபிடிக்க முடியாது. நான் வீட்டிற்கு செல்ல ஒரு வழி உண்டு. தோட்டத்தின் வழியாகவோ, குறுக்கு வாயாகவோ அல்ல; நெடுஞ்சாலை வழியாக செல்லவேண்டும். அப்படி தான் அது உண்டாக்கப் பட்டிருக்கிறது; எனக்கு அருளப் பட்டிருக்கிறதும் அதுதான். தேவனுக்கு எந்தவித குறுக்குவழி இல்லை. நாம் எல்லோரும் ஒரே வழியில் தான் வந்தோம். அது சரிதானே? மகிமைக்குள் செல்வதற்கு குறுக்கு வழி கிடையாது. நாம் அந்த வழியில் தான் வரவேண்டும். 19. ஆதியில் இருந்ததை பாருங்கள், காயினும் ஆபேலும் அவர்கள் பெற்றோரும் ஏதேனிலிருந்து விரட்டிவிடப்பட்டபோது, அவர்கள் இரண்டு பேரும் அழிவுக்குரியவர்கள் என்றும் மேலும் மரித்து போவார்கள் என்று அறிந்திருந்தனர்.......பாருங்கள். காயினும், ஆபேல் இரண்டு பேரும் தேவனை தொழுது கொள்ளவேண்டும் என்று இருந்தனர். மற்றும் காயின் தேவனுக்கு ஒரு பலிபீடம் கட்டினான். இப்போது ஒரு பலிபீடம் தான் தேவன் விரும்பினார் என்றால். காயின் செய்தது நீதியாக இருக்கும். மற்றும் காயின் அந்த பலிபீடத்தின் மீது ஒரு பலி செலுத்தினான். அது சரிதானே? நல்லது தேவனுக்கு ஒரு பலிபீடமும் பலியும் மட்டும் தான் தேவை பட்டால் காயின் செய்தது நீதியாக எண்ணப்படும். பின்பு காயின் ஒரு பலி செலுத்தி, முழங்கால் படியிட்டு தேவனை தொழுதுகொண்டான். ஆனால் தேவன் அதில் விருப்பபடவில்லை, ஏனென்றால் அவன் சரியான வழியில் வரவில்லை. பாருங்கள், அவன் ஒரு ஆலயத்தை கட்டினான், ஒரு பலிபீடத்தின் நிறுவினான், அதின் மேல் பலியை வைத்தான். நிலத்தின் கனிகளை கொண்டு வந்தான். சொல்லபோனால் - மிகவும் அழகானவைகள். நீங்கள் இதை கவனிக்க வேண்டும் நண்பர்களே. இதை மறக்கவே கூடாது. 20. சகோதரன் கார்டன் (Gordon) என்னிடம் சொன்னார், இந்த கூட்டம் முடிவதற்குள், ஜனங்களிடம் இதை பேசுவதற்கு இன்றிரவு எனக்கு கிடைத்த பாக்கியம் என்று எண்ணுகிறேன். கவனியுங்கள், வார்த்தையை பேசுவது எனக்கு புத்துணர்ச்சியை உண்டாக்குகிறது. சில நேரங்களில் அது என்னை அபிஷேகத்தின் கீழ் வைக்கிறது. அது என் மேல் விழுகிறது. மேலும் அதற்கு பிறகு, நான் அங்கேயே நீண்ட நேரம் தங்கி இருப்பேன். நான் மிகவும் பெலவீனமாக இருப்பேன். என்னால நிற்க கூட முடியாது. ஆனால் பிரசங்கிப்பது மட்டும் என்னை வருத்தப்படவே செய்யாது. வார்த்தையை பேசுவதை நேசிக்கிறேன். கவணியுங்கள், பிறகு.........சில நிமிடங்களுக்கு முன்பு நான் சில மனிதர்களை அழைத்து, மற்றும் வேறு சிலரையும் அழைத்தபோது, சரியாக இப்போது வேறு யாரோ வந்து சுகத்தை பெற்றனர். இதை செய்ததற்கு காரணம் என்னவென்றால் அவருடைய ஆவி இங்கிருப்பதை நீங்கள் அறியவேண்டும் என்பதற்காக. அவர் இந்த கட்டிடத்திற்குள் இருக்கிறார், பாருங்கள்? 21. ஆனால் இப்போது மீண்டும் காயின் ஆபேலுக்கு வருவோம். காயின் தொழுது கொள்ளும் போது அவன் ஒரு பலிபீடத்தை கட்டினான், அவன் அதில் பலியை செலுத்தினான், அவன் தேவனை தொழுது கொண்டான். ஆனால் அது மட்டும் போதாது. மற்றும் அது மிகவும் அழகாக இருந்தது, நிலத்தில் வளரும் பூக்களும், மற்ற காரியங்களினாலும் அந்த பலிபீடத்தை அவன் அலங்கரித்ததற்கு எந்த சந்தேகமும் இல்லை. ஈஸ்டர் பண்டிகை நெருங்கும் போது தேசம் முழுவதும், பலிபீடத்தின் மேல் அந்தப்பூக்களுக்காக மில்லியன் டாலர்கள் செலவழிக்கின்றனர். நல்லது. தேவன் அந்த பலிபீடத்தின் மேல் போகக்கூடிய அந்த பூக்களைப் பற்றி எந்த அக்கறை கொள்வதும் இல்லை. அவருக்கு பலிபீடத்தின் மேல் நீங்கள் தான் தேவை. பலிபீடத்தின் மேல் நீங்கள் தான் தேவைப்படுகிறீர்கள். உங்களுடைய பூக்களோ அல்லது பணமோ அவருக்கு தேவைப்படுவது இல்லை. அவருக்கு நீங்கள் தான் தேவைப் படுகிறீர்கள். அந்த பலிபீடம் உங்களுக்காக தான் கட்டப் பட்டிருக்கிறது, ஏனென்றால் அவருடைய சித்தத்திற்கு, உங்களுடைய சொந்த சித்தத்தை பலியிட வேண்டும். பாருங்கள்? நல்லது, அப்போது........ஒருவேளை, பலிபீடம், பலி, தொழுது கொள்ளுதல் மட்டும்தான் தேவனுக்கு தேவை என்றால், அப்போது காயின் செய்தது நீதியாக கருதப்படும். மற்றும் அந்த அழகை கவனித்து பாருங்கள். இப்போது அநேக பூரண சுவிசேஷ சபைகளுள் அது - சரியாகத்தான் இருக்கிறது. பாருங்கள்? அவர்களுக்கு அதை விட கொஞ்சம் நல்ல ஆலயமாக கட்ட வேண்டும் என்ற ஆசை. ஒரு பைப் ஆர்கன் (pipe organ) வாங்குவதற்கு ஆயிரம் டாலர்களை செலவழிக்க விரும்புகின்றனர். அது தேவனை அங்கு கொண்டு வருவதில்லை. அது ஒருவேளை ஜனங்களைக் கொண்டு வரலாம். ஆனால் சுய வெறுப்பு தேவனை உள்ளே அழைத்து _ அவருடைய சித்ததிற்கு நேரே கொண்டுபோகிறது. பாருங்கள்? 22. மற்றும் ஞாபகம் கொள்ளுங்கள், மகிமையில் முதல் பாவத்திற்கு முதல் காரணம், மிகாவேலுக்கு இருந்ததைக் காட்டிலும் சாத்தானுக்கு கொஞ்சம் மேன்மையான காரியங்கள் தேவைப்பட்டது. அவன் சென்று தனக்கு கொஞ்சம் சிறந்த மேன்மையான அழகு ராஜியத்தை கட்டிக் கொண்டான். பாருங்கள்? அது தான் அழகு. அது சரியாக நேரே அவனுடைய குமாரன் காயினுக்குள் விழுகிறது. நேரே அவன் மீது வருகிறது. மற்றும் அவன் தன்னுடைய பலிபீடத்தை அழகாக ஜோடித்தான். ஆனால் இதோ, ஆபேல் ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியை தன் பின்னால் இழுத்துக்கொண்டு வருகிறான். அதில் எந்த அழகையும் நான் பார்க்கவில்லை. அந்த நாட்களில் கயிறு இருந்ததில்லை, ஆகையால் ஒரு திராட்சை கொடியை அதின் கழுத்தை சுற்றி இழுத்துக் கொண்டு வந்தான் என்று நான் யுகிக்கிறேன், ஏனென்றால் அது _ அது கிறிஸ்துவாக இருந்தது. அது யாராக இருந்தது. ஏனென்றால் அவரை அடிக்கப்படும் ஆட்டுக்குட்டியை போல நடத்தி சென்றனர். அவர் கழுத்தை ஒரு கயிற்றினால் சுற்றினர். மற்றும் இதோ அவன் ஒரு சிறிய ஆட்டுக்குட்டியை இழுத்து கொண்டு சென்றான். அது கத்திகொண்டே பின்புறமாக இழுத்துக் கொண்டே சென்றது. அவன் அதை ஒரு பாறையின் மேல் கிடத்தினான். ஒருவேளை அந்த நாட்களில் கூர்மையான கத்தி ஒன்றும் இருந்திருக்காது. அதின் சிறு தலை பாறையின் மேல் இருக்க, ஒருவேளை ஒரு பழைய கூர்மையான பாறாங்கல்லை அதின் கழுத்தில் அடித்திருப்பான்; ஆபேல் இப்படி செய்தான், பாருங்கள்? மற்றும் இரத்தம் அதின் கழுத்தில் இருந்த சிறு இரத்தநாலங்களிருந்து பீச்சிக்கொண்டு வந்தது. நீங்கள் எப்போவாவது ஒரு மரித்துகொண்டிருக்கும் ஆட்டுகுட்டியின் சத்தத்தை கேட்டிருக்கிறீர்களா? நீங்கள் கேட்டதிலே, மரித்து கொண்டிருக்கும் ஒரு ஆட்டுகுட்டியின் சத்தத்தை போல பரிதாபமான சத்தத்தை கேட்டே இருக்கமாட்டீர்கள். அது எப்படி இரத்தம் சொட்ட சொட்ட கத்தும் தெரியுமா? 23. தேவன் பரலோகத்திலிருந்து, கீழே பார்த்து சொன்னார் "அது தான் தேவை." இரத்தம் பேசுகிறது, எப்பொழுது அது பேசினது? தேவ ஆட்டு குட்டி கடந்து சென்ற பிறகு, அநேக வருடங்களுக்கு பின் இரத்தம்......நீங்கள் உங்கள் தகப்பனும், தாயுடைய இரத்தத்தை உடையவர்கள். ஆனால் மீண்டும் பிறந்திருப்பதினால், நீங்கள் தேவனின் இரத்தமாக மாறுகிறீர்கள், கிறிஸ்துவின் இரத்தம் நம்மை சுத்திகரிக்கிறது. மற்றும், அதோ அவர் அங்கே அந்த தேவ ஆட்டுகுட்டி, கல்வாரி சிலுவையில் தொங்கிக் கொண்டு, இரத்தம் சொட்ட சொட்ட அடிக்கப்படும் ஆட்டை போல கத்திக்கொண்டு, அவர் தலையிலிருந்து இரத்தத்தால் தோய்ந்த முடியிலிருந்து, இரத்தம் தோள்கள் மீது சொட்டிக் கொண்டு இருக்க, இரத்தமானது எல்லா இடத்திலேயும் தெறிக்க, பில்லி சண்டே (Billy Sunday) அவர்கள் சொன்னது போல, அந்த மணி நேரத்தில், "தேவ தூதர்கள் ஒவ்வொரு புதரிலும் உட்கார்ந்து கொண்டு சொன்னார்கள், உம் கரத்தை எங்களிடம் திருப்பி சுட்டி காண்பியும், நாங்கள் அந்த கூட்டத்தை அழித்து போடுவோம்" என்று சொன்னதை நம்புகிறேன். அவர்களில் சிலர் சொன்னார்கள், "அவர் தன்னை தான் இரட்சித்துக் கொண்டார்........மற்றவர்களை இரட்சித்துக் கொண்டான், ஆனால் தன்னை தான் இரட்சித்து கொள்ளமுடியவில்லை" இப்படியாக பரிகசித்துக் கொண்டிருந் தார்கள்." அது தான் அவருக்கு செலுத்தியதிலே மிக பெரிய மரியாதை. அவர் தன்னையும், மற்றவர் களையும், இரட்சிக்க முடியவில்லை. ஆகையால் மற்றவர்களை இரட்சிக்க அவர் தன்னை தானே ஒப்புக்கொடுத்தார். அது தான் அந்த வழி. பரிசுத்த ஆவி வருவதற்கு, இரத்தத்தின் மூலமாக, அது வழி வகுத்தது. இன்றைய நாளில், தேவனோடு மனித இனம் தொடர்புகொள்வதற்கு அது தான் வழி வகுக்கிறது. 24. காலாகாலமாக எல்லோரும் தேவனை கண்டு கொள்வதற்கு விரும்பினார். பழைய காலத்தில் யோபு சொன்னார் "ஓ, அவர் மட்டும் எங்கே இருக்கிறார் என்று நான் அறிவேனானால்" அவன் உபத்திரவத்தில் சாம்பலில் தன் புண்களை சொரண்டிக் கொண்டு ,உட்கார்ந்திருக்கும் போது........இந்த காரியத்தில், தேவன் தன்னுடைய பரிசுத்தவானோடு இடைபடுகிறார்.......ஏதோ அவன் அங்கே தன் புண்களை சொரண்டிகொண்டிருந்தான். அவனுடைய சபையில் உள்ள சில நண்பர்கள் வந்தனர். அவர்களுடைய முதுகை காட்டிக் கொண்டு, அவனை ஆறுதல் படுத்துவதற்காக அல்ல. ஆனால் யோபுக்கு அறியவேண்டும். "ஓ எனக்கு மட்டும் அவருடைய வீடு இங்கே இருக்கும் என்று தெரிந்தால் (வேறு வார்த்தையில் சொல்லபோனால்) நான் அவர் வீட்டு கதவை தட்டுவேன் என்றால், அவர் வெளியே வந்து என்னுடன் பேசுவார்." அது தான் அவன் செய்ய விரும்பினான். ஆனால் கவனியுங்கள், ஒரு மனிதன் தேவனுக்காக பசித்தாகம் உடையவனாக இருந்தால், தேவன் அவனோடு எப்பொழுதும் நெருங்கி இருப்பார். பாருங்கள்? உங்கள் சித்தத்தை தேவனிடம் சரணடைய விட்டுகொடுங்கள். பின்பு அவனுடைய சபை நண்பர்கள் அவனை ஆறுதல் படுத்த முடியாமல் போனதால் அவன் ஒரு இரகசிய பாவி என்றும், தேவனுக்கு........முன்பாக அவன் பாவம் செய்தான் என்றும், அவனை தூஷித்தார்கள். யோபுக்கு தான் பாவம் செய்யவில்லை என்று நன்றாக தெரியும், மற்றும் அவன் சரியாக தான் இருக்கிறான் என்று அவனுக்கு தெரியும். ஆனால் யோபுவை பார்க்கும் படி தேவன், எலிபாஸ் என்ற ஒரு இளைஞனை அனுப்பினார். மீண்டும் கிறிஸ்துவின் ஒரு பரிபூரண மாதிரி. அவன் யோபுவை ஒரு இரகசிய பாவி என்று தூஷிக்கவில்லை. அவன் கடைசி நாட்களில் மீறுதலின் நிமித்தம் ஒருவர் அங்கு நின்று, தன்னுடைய கரத்தை ஒரு பாவியின் மேலும், தூய தேவனின் மேலும் போட்டு வழியை பாலமாக இணைப்பார். 25. யோபு ஒரு தீர்க்கதரிசியாக இருந்ததால் அந்த வெளிப்பாட்டை பிடித்துக்கொண்டான். அவன் எழுந்து நின்றான், மின்னலடிக்க ஆரம்பித்து விட்டது; இடி கர்ஜிக்க துடங்கினது. அந்த தீர்க்கதரிசி தன்னுடைய பிதாவாகிய தேவனிடம் தொடர்பு கொண்டான். அவன் திரும்பி பார்த்து சொன்னான், "என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று அறிவேன். கடைசி நாட்களில் அவர் இந்த பூமியின் மேல் நிற்பார். இந்த என் தோல் முதலானவை அழுகிப்போன பின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனை பார்ப்பேன். அவரை நானே பார்ப்பேன், அந்நிய கண்கள் அல்ல, என் கண்களே அவரை காணும்." தேவன் அவருடைய அண்ட சராசரத்தில் இருக்கும் போது.........ஆத்துமா தேவனை நோக்கி கூப்பிடுகிறது. 26. எனக்கு லவ் பேர்ட்ஸ் (love birds) என்றால் மிகவும் பிடிக்கும், சமீபத்தில் நான் இங்கே மீன் பிடிக்க செல்லும் போது சில கழுகுகளை கவனித்தேன், ஒரு வயதான தாய் கழுகு ஒரு மலை உச்சியில் இருந்து தனது இறக்கைகளை விரித்து பறக்க ஆரம்பித்தது, அந்த சிறு கழுகு குஞ்சுகள் அதன் இறக்கையை பிடித்துக்கொண்டது. அந்த தாய் பறவை வேகமாக அந்த பள்ளத்தாக்கிற்குள் சென்றது. அது தான் அந்த குஞ்சுகள் கூட்டை விட்டு வெளியே சென்ற முதல் அனுபவம். அங்கே எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. தேவனை அங்கு பார்க்க முடியுமா? ஆமாம், ஒரு பாவிக்கு இப்போது, இது ஒரு மாதிரி.......நீங்கள் எப்போவாவது நினைத்ததுண்டா.....இந்த உலகத்தின் காரியங்கள் ஒரு கழுகின் கூட்டை போன்று இருக்கிறது என்று, முழுவதும் குச்சிகளாலும், முற்களாலும், வாந்தியினாலும் நிறைந்திருக்கிறது. கழுகுகள் உண்டதை எதுக்களிப்பவைகள். மேலும் அவைகள் தான் தின்றதை வாந்தி எடுத்து அதனால் துர் நாற்றம் எடுக்கும். மேலும் இந்த உலகத்தின் கூட்டில் இருக்கும் ஒரு பாவிக்கு, இந்த உலகத்தின் வாந்தியில், சாரயக்கடையில், சுற்றி லாந்திக்கொண்டு, எதை பற்றியும் அறியாமல், அந்த பழைய கூட்டை தவிர ஒன்றும் அறியாமல் இருக்கிறான்....... மேலும் அவள் தன்னுடைய சிறு கழுகு குஞ்சுகளை எடுத்து கொண்டு சென்றதை பார்த்தேன். அவைகள் அந்த தாயின் இறக்கைகளை இரூக பிடித்து கொண்டன. மற்றும் அவள் கீழே அந்த மலையை கடந்து பள்ளத்தாக்குகளில் சென்றது, அது தன்னுடைய பெரிய இறக்கையை விரித்து அந்த குஞ்சுகளை கீழே விழும்படி செய்தது. அந்த குஞ்சுகள் அங்கும் இங்குமாக ஓடி, முதன் முறையாக அந்த மென்மையான புல் தரையை அந்த சிறு கால்கள் தொட்டது. அவைகள் பசுமையான புற்களை தின்றது. "அவர் என்னை அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் நடத்துகிறார்." ஒ என்ன ஒரு மகிமை, என்ன ஒரு அற்புதம். 27. பின்பு அதை கூர்மையாக கவனித்த போது, அப்படி அதை செய்த போது, அந்த சிறு கழுகு குஞ்சுகள்........அந்த வயதான தாய் கழுகு அதை பார்த்த போது......அப்படியே மீண்டும் அந்த மலையின் உச்சிக்கு பறந்து சென்றது. அங்கு அந்த பாறையின் மீது உட்கார்ந்து கொண்டு, கீழே அந்த குஞ்சுகளை பார்த்துக்கொண்டிருந்தது. மற்றும் நான் "ஓ அதை பார்த்தால் ......போல இருக்கிறது அல்லவா." ஏதோ ஒரு சிறு பெண்ணுக்கு சுகமில்லை போல தெரிகிறது. முதியவர்களில் யாராகிலும் ஒருவர் தயவுகூர்ந்து, அங்கு சென்று, அந்த சிறு பெண்ணுக்கு ஜெபிப்பீர்களா? அவள் நாற்காலியில் விழுந்து கிடக்கிறாள். மற்றும் அதன் பின்......இப்போது; கூர்ந்து கவனியுங்கள். இந்த வழியாக கவனம் செலுத்துங்கள். அந்த சிறு பெண்ணுக்கு சுகவீனம் ஏற்பட்டதால், சிலர் அவளுக்கு ஜெபம் செய்யப் போகிறார்கள். அவள் கரங்களில் அட்டை உண்டு என்று நான் நினைக்கிறேன். வரிசையில் நில்லுங்கள், சிறிது நிமிடங்களில் எல்லாம் சரியாகிவிடும். 28. இப்போது கூர்ந்து கவனியுங்கள். அந்த வயதான தாய் கழுகு அங்கு உட்கார்ந்துகொண்டு, தன் குஞ்சுகளை கவனித்தாள். நான் நினைத்தேன் "என்ன ஒரு மகிமை, இயேசு வந்து இந்த உலகத்தின் காரியங்களில் இருந்து நம்மை எடுத்து, இந்த மகிமையான விடுதலைக்கு கொண்டு செல்கிறார்." பின்பு அந்த சிறிய கழுகு குஞ்சுகள், அங்கும் இங்கும் கவலையின்றி ஓடிக்கொண்டு, புல்லை தின்பதை பார்க்கும்போது, மகிமையான பண்டைய காலத்து பரிசுத்த ஆவியின் கூட்டத்தில், அந்த தேவனின் பரிசுத்தவான்கள், உலகத்தின் காரியங்களிலிருந்து வெளியே வந்து தேவனின் ஆசீர்வாதமான பசுமையான தரையின் மேல் கவலை இல்லாமல், இருப்பது போன்று இருக்கிறது. மகிமையின் மதில் மேல் நமது இரட்சகர் ஏறி விட்டார். அவருடைய கண்கள் அந்த சிட்டுக்குருவி மேல் உள்ளது, என்னை அவர் கண்காணிக்கிறார், என்பதை நான் அறிவேன். அவருக்கு எல்லாம் தெரியும். உனக்கு என்ன பிரச்சினை உண்டு என்பதை பற்றி எல்லாம் தெரியும். இதோ, அவள் பார்த்துக்கொண்டிருக்கிறாள். நான் அவளை பார்த்தேன். என்னுடைய பைனாகுலர் மூலம் அவளை நான் பார்த்தேன். அந்த பெரிய தலையை இரண்டு பக்கமும் திருப்பி அவள் பார்த்தாள். நான் "என்ன பிரச்சனை அவளுக்கு" என்று நினைத்தேன். அவள் உட்கார்ந்துகொண்டு அந்த சிறு கழுகு குஞ்சுகளை கண்காணித்துக் கொண்டிருந்தாள். தேவன் மீண்டும் தன்னுடைய சிருஷ்டிப்பில் இருப்பதை பார்க்கிறோம். தேவன் தம்முடைய அண்ட சராச்சரத்தில் இருக்கிறார். ஒருவேளை ஒரு ஓநாய் அந்த கழுகு குஞ்சுகளை பிடித்தால் என்னவாகும் என்று நான் நினைத்தேன். ஏன்? ஒரு நொடி பொழுதில் அவளுடைய வயதான தாய் அங்கே அந்த குஞ்சுகளிடம் இருப்பாள். 29. சிறிது நேரம் கழித்து, அவள் தனது தலையை தூக்கி பார்த்ததை நான் பார்த்தேன். அவள் மேலே பார்த்து சத்தமிட்டாள். திடீர் என்று அந்த மலையில் இருந்து, கீழே பள்ளத்தாக்கிற்குள்மறைந்து விட்டாள். மற்றும் அவள் அங்கு சென்றவுடன், அவள் தனது கம்பீர சிறகுகளை விரித்து உரத்த சத்தமிடுவாள். அப்படி அவள் செய்யும் போது, ஒவ்வொரு கழுகு குஞ்சும் சாப்பிடுவதை விட்டுவிட்டு, எவ்வளவு துரிதமாக ஓடமுடியுமோ, அவ்வளவு துரிதமாக ஓடி அதன் தாயின் சிறகுகளை தன் சிறிய வாயால் கவ்விக்கொல்லும். தனது சிறிய கால்களை இறக்கைளுக்குள் இழுத்துகொள்ளும். எதற்காக இப்படி செய்தது என்று நான் வியந்தேன். இன்னும் என்னால் அதை பார்க்க முடியவில்லை. ஆனால் அந்த மலைகளினூடாக ஒரு புயல் காற்று வரும் வாசனையை முகர்ந்து, வருவதை அறிந்து அந்த தாய் கழுகு தன்னுடைய குஞ்சுகளை கண்காணித்து கொண்டிருந்தது. அதன் பிறகு, அது தரையிலிருந்து எழும்பி பறந்து செல்வதற்குள், புயல் வந்து எல்லா குழியையும் நிரப்பி, அடித்துக்கொண்டு சென்றது. அப்படி அது நடக்கையில், ஒரு மணி நேரத்திற்கு 60 மைல் வேகத்தில் வீசிக் கொண்டிருக்கும் புயல் காற்றிற்குள் அந்த கழுகு ஊடுருவி சென்றது. அந்த சிறு கழுகு குஞ்சுகள் அந்த தாயின் இறக்கைகளை இருக பிடித்துக்கொண்டு சென்றது. சரியாக கன் மலையின் வெடிப்புக்குள் நேராக சென்றது. நான் நினைத்தேன், ஓ, தேவனே இந்த மணி நேரத்தில், பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் வரப்போகிறது; தேவனுடைய எக்காள சத்தம் கேட்கப்படும், அப்பொழுது ஓவ்வொரு கிறிஸ்தவனும் அந்த பழைய குருசின் மேல், வாழ்க்கை என்னும் புயலினூடாக ஊடுருவி, கிறிஸ்து இயேசு என்னும் பிளவுண்ட மலையின் வெடிப்பிற்குள் பறந்து செல்லுவான். ஓ, என்ன! தேவனுடைய தன்மை, இந்த அண்ட சராசரத்தில் இருப்பதை கவனியுங்கள். ஒரு நொடி பொழுதில் நம்மை எடுத்துகொள்ளுவார், எப்படிப்பட்ட கடின பரீட்சையாக இருந்தாலும் சரி, அவருடைய சிறகுகளை இருக பிடித்து கொள்ளுங்கள். அவர் நம்மை தூக்கி செல்வார். பறவைகளை கவனித்து பாருங்கள், அவைகளை அவர் எப்படி பாதுகாகின்றார் என்று சூரியன் மறையும் போது தேவனை கவனித்து பாருங்கள். 30. கிறிஸ்தவ மதவிரோதி ஒருவன் தேசத்தின் வழியாக சென்று கிறிஸ்தவர்களை, மத விரோதிகளாக மாற்ற முற்பட்டான். அவன் ஒரு பெரிய படிப்பாளியானதால், மத போதகர்களும் அவனை எதிர்க்க பயந்தனர். அதற்கு பிறகு அவன் ஐரோப்பா கண்டத்திற்கு சென்றான். அவன் திரும்பி வரும் போது அவனுக்கு உடல் நலம் பாதிப்பிற்குள்ளானது. அவன் மேற்கு தேசத்திற்குள் ஓய்வெடுக்க சென்றான். ஒரு நாள் அவன் தங்கியிருந்த முகாமிலிருந்து வெளியே வந்த போது அவன் மெய்சிலிர்த்து போனான். அவன் கீழே பார்த்த போது, கீழிருந்து அந்த காற்றின் மெல்லிய சத்தம் வந்துகொண்டிருந்தது, அது அந்த பைன் மரங்களிலிருந்து வந்தது. அவன் மேலே பார்த்தான். அவன் மேலும் அங்கே உயரத்தில் அந்த மலைகளில் தொங்கிக்கொண்டிருந்த பாறைகளை பார்த்தான். அவன் சொன்னான் "ஒ பாறைகளே உங்களை அந்த மலையில் யார் போட்டார்? இந்த உலகத்தின் சிருஷ்டிப்பின் வரலாற்றை நான் தவறாக எண்ணினேனோ?" திடீரென்று தேவன் பேச ஆரம்பித்தார், வேதாகமம் சொல்லுகிறது, "அவைகள் பேசாமல் போனால் இந்த கல்லுகள் கூப்பிடும்" என்று. தேவன் அவருடைய பாதையிலிருந்து, இந்த பிரபஞ்சத்திலிருந்து பேசுகிறார். நல்லது அந்த மத விரோதி, ஒரு மரத்தின் பக்கமாக முழங்கால் படியிட்டு "ஓ! தேவனே என் ஆத்துமா மீது இரக்கம் வைப்பீராக" என்று சொன்னான். அங்கே தான் நீங்கள் பார்க்கவேண்டும். அவர்களுடைய போதகர்கள் அவனை எதிர்பதற்கு பயந்தார்கள். தேவன் பாறைகளை அவனிடம் பேச வைக்க முடியும். தேவன் தம்முடைய பிரபஞ்சத்தில் இருந்து தம்முடைய ஜனத்துடன் பேசுகிறார். 31. நான் சூரியன் அஸ்தமிப்பதை பார்த்திருக்கிறேன். அங்கு நின்று கொண்டு, ஒரு சிறு குழந்தை அழுவது போல அழுது இருக்கிறேன். என்னால் அழுகையை நிறுத்தவே முடியவில்லை, அந்த சூரியன் உதிப்பதையும், அஸ்தமிப்பதையும் காண்பது அத்தனை மகிமையாய் இருந்தது. தேவன் தம்முடைய மிருகங்களில் இருத்தல். இந்த குளிர்காலத்தில் செய்தித் தாழ்களை பாருங்கள். மற்றும் செய்தித்தாள்கள் சொல்கிறது, "நாளைக்கு விலங்கு கண்காட்சி" என்று எல்லா செய்தித்தாளின் விமர்சிப்பாளர்கள் எல்லோரும் நாளைக்கு கண்காட்சி இருப்பதாக கூறுகிறார்கள். அந்த பெண் பன்றியை கவனியுங்கள், அது தனது கன்றுக்குட்டி பன்றிகளை வடபக்கமான மலையின் மீதிலிருந்து, தென் பக்கமாக அழைத்து சென்று, படுக்கை போடுகிறது. செய்தித்தாள்கள் என்ன சொல்கிறது என்று நம்புகிறீர்களா? இல்லை ஐயா, மற்ற உலகத்தில் உள்ளது போல குளிராக இருக்கும். வெளியே சென்று ஒரு முயலை வேட்டையாட செல்லுங்கள், அது நிலத்துக்கடியில் சென்று விடும். குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், பனியும் வருவதை அது அறியும் .நிச்சயம் . அவைகளுக்கு தேவன் தந்த ஒரு உணர்வு உண்டு. 32. சமீபத்தில்......நான் மலைகளுக்கு வேட்டையாட சென்றி ருந்தேன். மற்றும் அங்கே, அங்கே....அநேக நேரங்களில் லுசியானாவில் வாத்துகள் வெளியே வந்து வடக்கை நோக்கி சென்று, கனடாவிலும் அதை சுற்றிலும் அந்த களிமண் பகுதியில் அவைகளுடைய கூடுகளை உண்டாக்கும். மற்றும் அவைகள் அங்கே முட்டை இடும். மற்றும் குஞ்சுகளை பொரிக்கும். அவைகள் குஞ்சு பொரித்தவுடன், அந்த குஞ்சி வாத்துகளுக்குள் ஒரு சிறிய ஆண் வாத்து குஞ்சு, தலைவனாக இருக்கும். அந்த மலைகலில் குளிர்ந்த காற்று வீச ஆரம்பித்த உடனே ,அந்த சிறிய வாத்து வெகுவாய் அந்த குளத்தின் மத்திய பகுதியிலிருந்து வெளியே வந்துவிடும். அவன் அங்கே தான் பிறந்தான். ஆனால் அது தன் வாழ்க்கை முழுவதும் குளத்தை விட்டு வெளியே வந்ததே கிடையாது. அவன் வெளியே வந்து தன்னுடைய சிறு மூக்கை மேலை தூக்கி, நான்கு அல்லது ஐந்து முறை ஒலி எழுப்புவான். அந்த குளத்தில் இருக்கிற ஒவ்வொரு வாத்தும், அவனிடம் செல்லும். "என்ன காரியம்?" தேவன் அந்த வாத்துகளுக்கு ஒரு உணர்வை கொடுத்திருக்கிறார். அது சரியா. அந்த சிறிய வாத்து பிறப்பிலேயே தலைவனாக பிறந்தான் என்பதை அவைகள் அறிந்திருந்தன. ஏதோ ஒரு காரியம் நடக்கப் போகிறது என்று அறிந்துகொண்டன. குளிர்ந்த காற்று அங்கே அடித்துக் கொண்டிருந்தது. அங்குள்ள தவறு என்னவென்றால், குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போது, மனிதன் தன்னுடைய தலைவனாகிய தேவனுக்கு செவி கொடுக்க மாட்டான். 33. இந்த சிறிய வாத்தை சுற்றி எல்லா வாத்துக்களும் வந்தடையும். அவன் அந்த தண்ணீருக்கு மேலே எழும்பி குளிர்காலத்தை தவிர்ப்பதற்காக, தான் வாழ்கையில் முன் பின் சென்றிராத அந்த லுசியானாவில் உள்ள நெல் வயலுக்கு, நேரே சென்று விடுவான், இதற்கு காரணம் தேவன் நிர்ணயித்த ஒரு வழியை அவன் அறிந்திருந்ததினால் தான். அவன் அங்கு சென்றதே கிடையாது. அவனிடம் திசைக்காட்டும் கருவி இருக்கவில்லை. அவன் ஒரு திசைகாட்டி கருவியை நம்பவே மாட்டான். தேவன் தந்த அந்த உணர்வை தான் அவன் நம்பினான். நமக்கு வாத்தினுடைய உள்ளுணர்வு தேவைப்படுகிறது. குளிரிலிருந்து தப்பித்துக்கொண்டு பாதுகாப்பான இடத்துக்கு செல்வதற்கு ஒரு வாத்துக்கு தேவன் போதுமான அளவிற்கு உள்ளுணர்வை தருவார் என்று சொன்னால், தேவனை நம்பும் படியாக எவ்வளவு அதிகமாக பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தை தம்முடைய சபைக்கு தருவார். இயற்கையிலேயே தேவன் ஒரு வாத்துக்கு ஒரு உள்ளுணர்வை தந்திருக்கிறார். உனக்கு தேவன் பரிசுத்த ஆவியை தந்திருக்கிறார். அவர் தான் உன்னுடைய தலைவர். இந்த இரவு உன்னை இரட்சிப்பதற்காகவும் உனக்கு சுகம் தருவதற்காகவும் அவர் இங்கே இருக்கிறார். தேவன் தம்முடைய இயற்கையிலும், தம்முடைய பிரபஞ்சத்திலும் இருக்கிறார்...... 34. ஒரு நாள் நானும் என்னுடைய தகப்பனும் உழுது கொண்டு இருந்தோம். மற்றும் அந்த குதிரைகள் கணைக்க ஆரம்பித்தன. நான், "அப்பா அவைகளுக்கு என்ன பிரச்சனை" என்று கேட்டேன். அவர், "மகனே ஒரு புயல் வந்து கொண்டிருக்கிறது" என்று சொன்னார். நான் சொன்னேன், "ஓ, அப்பா அது எவ்வளவு தெளிவாக உள்ளது என்று பாருங்கள்." அவர் சொன்னார், "தேவன் குதிரைகளுக்கு ஒரு உள்ளுணர்வை தந்திருக்கிறார், அது அநேக மைல்களுக்கு அப்பால் வரும் புயலை உணர்ந்து கொள்ளும்." மற்றும் நாங்கள் இரண்டு சுற்று முடிப்பதற்குள், பண்ணைக்குள் ஓடிவிட வேண்டி இருந்தது. அந்த குதிரைகள் அதை பார்த்திருந்தன. அவைகளுக்கு அது தெரியும். அவைகளுக்கு மற்ற உணர்வுகள் மூலமாக ஒரு அடையாளத்தை பார்ப்பதற்கு முன், ஒரு உள்ளுணர்வின் மூலமாக அதை உணர்ந்து கொள்ள முடிகிறது. ஓ [ஒலி நாடாவில் காலி இடம்] அந்த பரிசுத்த ஆவி. ஓ தேவ சபையே, ஆசிர்வாதத்தின் குவலையின் ஓரத்தை முத்தமிடுகிறேன் என்று, கோருகிற உனக்கு எப்படி தேவனை சந்தேகிக்க முடியும்? அவர்தான் சர்வ வல்லமை உள்ளவராக இருக்கிறார். அவர் இப்பொழுது இந்த கட்டடத்தில் உள்ள ஒவ்வொரு நபரையும் ஆசீர்வதிக்கவும், சுகம் தரவும் இங்கே நின்று கொண்டிருக்கிறார். ஏன்? நீங்கள் அவரை எப்படி சந்தேகிக்க முடியும்? காலங்கள் பூராவும் தேவனுக்கென்று நிற்க துணிந்தவர்கள் தான் வெற்றி சிறக்க முடியும். எப்படி அநேக காரியங்களை தேவன் அளிக்கிறார்...... 35. எப்படி கரடிகள் எனது பிரியமுள்ள வேட்டையானது அந்த வயதான தாய் கரடி..... இளையுதிர் காலத்தில், இனச்சேர்க்கை காலத்தில், மலைகளுக்கு மேலே செல்லும். அங்கே அவைகள் கௌமிலன் என்ற நச்சு செடியின் கூம்பை உண்ணும், மற்றும் அது வேறொன்றையும் சாப்பிடாது. அதின் வயிறு எனது முஷ்டியின் அளவுக்கு சுருங்கி விடும். வசந்த காலத்தில் 5 காலன் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு இருக்கும் .மற்றும் அது சுருங்கி விடும். அது பின்னால் தங்கிவிடும். அதின் குட்டிகள் பிப்ரவரி மாதத்தில் பிறக்கும். அது எழும்பவே எழும்பாது. அவளுக்கு 3 அல்லது 4 குட்டி கரடிகள் பிறக்கும். மற்றும் மே மாதத்தில் அது எழும்பும் வரைக்கும், அதற்கு ஒன்றுமே தெரியாது, மற்றும் அதின் குட்டிகள் பெரியவர்கள் ஆகிவிடும். அது ஒன்றும் சாப்பிடாமல் இருக்க, அந்த குட்டிகள் தொடர்ந்து அதனிடம் இருந்து பால் குடித்துக்கொண்டே இருக்கும். இது என்னவாக இருக்கிறது? தேவனுடை அருளப்பட்ட வழி. அது சரிதானே. தேவன் ஒரு வழியை திறப்பார். 36. சமீபத்தில், பக்கத்தில் உள்ள ஒரு பட்டணத்தில் ஒரு பிரசங்கியார் இருந்தார். அவர் ஒரு சுவிஷேசகர். அவர் தனக்கு அதிகம் தெரியும் என்று நினைத்தார். அவருடைய சபைக்கு ஒரு சிறுவன் செல்வான். அவன் தன்னுடைய தாயாரிடம் "ஒரு.....பொறுமையுடன் இரு. சரி. அந்த சிறுமியை அவர்கள் வெளியே அழைத்து செல்கிறார்கள் போலும். அதற்கு ஆசிர்வாதம் அல்லது அதுபோல ஏதோ கிடைக்கும் போல உள்ளது. அவர்கள் அந்த..........ஜெப கூடாரதிற்கு கொண்டு செல்கின்றனர். நல்லது. நல்லது இப்போது கவனியுங்கள். அது எல்லாம் சரி. நல்லது. நாம் இந்த சிறுவனை கவனிப்போம், அவன் பிரசங்கியாரிடம் சென்று சொன்னான். "பாஸ்டர்......." அல்லது அவன் முதலில், அவனுடைய அம்மாவிடம் கேட்டான். அது ஒரு நல்ல வழி. தேவன் சுகம் தந்தார். சென்று உன்னுடைய இருதயத்தை தேவனுக்கு கொடு. அது சரி தானே? அது தான் நல்ல வழி. 37. இப்போது, கவனியுங்கள். முதலில், அந்த சிறுவன் அந்த பிரசங்கியாரிடம், "பிரசங்கியாரே, நீங்கள் தேவனை பற்றி அதிகம் பேசியுள்ளீர்கள், யாராவது தேவனை பார்த்ததுண்டா?" என்று கேட்டான். நல்லது அந்த பிராசங்கியார் சொன்னார். "இல்லை தேனே" சொன்னார், "தேவனை பார்த்து யாரும் உயிருடன் இருந்ததில்லை." நல்லது அவன் ஒரு சிறு பையன். மேலும் அவன் தன் அம்மாவிடம் கேட்டான், அவனுடைய அம்மா தனக்கு தெரியவில்லை என்று கூறிவிட்டாள். அவன் தன்னுடைய ஞாயிறு பள்ளி ஆசிரியை கேட்டான். அவளுக்கு தெரியவில்லை, என்று அவள் சொன்னாள், "ஒருவராலும் தேவனை பார்க்கமுடியாது." என்று அவன் மிகவும் ஏமாற்றம் அடைந்தான். மேலே, அந்த ஆறு மைல் தீவில் ஒரு ஆற்று பக்கமாக அவன் தங்குவதுண்டு. அங்கே நீளமான தாடியையுடைய ஒரு வயதான மீன் பிடிப்பவன் இருந்தான், இந்த சிறுவன் அந்த வயதானவரை சுற்றியே இருப்பான். 38. ஒரு நாள் அந்த ஆற்றின் மேல் புறத்தில் அவர்கள் இருக்கையில் ஒரு புயல் வந்தது, அந்த புயலுக்கு பிறகு அவர்கள் இரண்டு பேரும் கீழே அந்த ஆற்றின் வழியாக வந்தார்கள். இங்கிருக்கும் எந்தவொரு படகோட்டிக்கும், படகை செலுத்துவதற்கான அதின் துடுப்பின் ஆழம் என்னவென்று தெரியும், அந்த துடிப்பின் நுனியில், அலைகளின் தன்மை என்னவென்று அறியமுடியும். உங்களுக்கு தெரியுமா? மற்றும் அந்த வயதானவர் சுற்றி பார்த்தார், சூரியன் வெளியே வந்து விட்டது, ஒரு வானவில் தோன்றியது. இலைகள் எல்லாம் அடித்துக்கொண்டு சென்றுவிட்டது. அந்த வயதானவர் படகை இழுத்துக்கொண்டே இருந்தார்; அவர் கன்னத்தில் கண்ணீர் வடிய ஆரம்பித்தது. அவர் கொஞ்சம் தூரத்திற்கு இழுத்தவுடன், திரும்பி பார்ப்பார். படகின் பின் பகுதியில் உட்கார்ந்துகொண்டு இருந்த அந்த சிறு பையன் மிகவும் உற்சாகம் அடைந்ததால் அவன் அந்த படகின் மத்திய பகுதிக்கு சென்று விடுவான். மற்றும் அவன் கேட்டான்," ஐயா, நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன் எனது அப்பாவிடமும் அம்மாவிடமும், எமது பாஸ்டரிடமும், ஞாயிறு பள்ளி ஆசிரியரிடம் கேட்டேன், ஒருவருக்கும் பதில் சொல்ல முடியவில்லை" என்று சொன்னான், "ஒரு தேவன் உண்டென்பதை நான் நம்புகிறேன்." மற்றும் சொன்னான், "நான் அவரை எப்படியாகிலும் பார்க்கலாமா?" அந்த வயதான மீனவருக்கு அது மிகவும் களிப்பூட்டியது. அவர் அந்த துடுப்பை உள்ளே இழுத்து, கரங்களால் தன் முகத்தை மூடியவாறு சிறு குழந்தையை போல அழுது, எட்டி, அந்த சிறுவன் மீது கரங்களை போட்டு, சொன்னார், "தேனே தேவன் உன் இருதயத்தை ஆசீர்வதிப்பார். கடந்த முப்பத்தைந்து வருடமாக நான் பார்த்திருந்ததே தேவனை தான்." 39. ஏன் நிச்சயமாக. அவன் உள்ளத்தில் தேவன் அவ்வளவாக நிரம்பி இருப்பதினால் வெளியே அவரை காணமுடிகிறது. தேவனை அவருடைய பிரபஞ்சத்தில் நீங்கள் பார்க்கவேண்டும் என்றால், அவரை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள். மரத்தில் உள்ள பறவைகள் எப்படி வித்தியாசமாக பாடுகின்றது என்பதை கேளுங்கள். உங்கள் உள்ளத்தில் தேவன் வந்தால் உங்கள் எதிராளிக்கூட வித்தியாசமாகத் தான் தெரிவான். அவர் தமது பிரபஞ்சத்தில் இருக்கிறார். அவர் உன் உள்ளத்திற்குள் இருந்து வெளியே பார்த்து, தம்முடைய அற்புதமான பிரபஞ்சத்தை உனக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறார். (சிக்கிரமாக நாம் துரிதமாக செல்வோம்) தேவன் தமது பிரபஞ்சத்தில் இருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா? நீங்கள் எப்போதாவது சூரியன் அஸ்தமிப்பதில் அவரைப் பார்த்ததுண்டா? சூரியன் உதிக்கையில், அவரை எப்போதாவது நீங்கள் பார்த்ததுண்டா? அழகான மலைகளில் அவரை நீங்கள் எப்போவாவது பார்த்ததுண்டா? ஓ! நான் வியப்படைகிறேன். சில நேரங்களில் நான் அங்கே சென்று அந்த அழகான இயற்கையின் அழகை பார்த்து, என்னால் இயன்றமட்டும் என் சத்தத்தை உயர்த்தி, அப்படியே கூச்சல் இடுவேன், என்னால் அதை தவிர்க்கவே முடியாது. அங்கே ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது. தேவன் அவருடைய பிரபஞ்சத்தில்.......நாம் இங்கே நின்று கொண்டு, எப்படி அவரைப் பற்றி மணிக்கணக்காக பேசுவோம், எப்படி தேவன் தமது பிரபஞ்சத்தில் இருந்து பேசுகிறார். 40. இப்போது, இரண்டாவதாக, நாம் சீக்கிரமாக அதற்குள் செல்ல முயல்வோம்: தேவன் தம்முடைய வார்த்தைக்குள் இருக்கிறார். எவ்வளவு பேர் அதை நம்புகிறீர்கள்? தேவன் அவருடைய பிரபஞ்சத்தில் இருக்கிறார். எல்லாம் சரி. நீங்கள் அவரை, தமது பிரபஞ்சத்தில் இருப்பதை காணமுடியும். அவர் தமது வார்த்தைக்குள் இருக்கிறாரா என்பதை நாம் பார்ப்போம். அவர் சொன்னார், "என் வார்த்தையே ஜீவன். உண்மையிலேயே ஜீவன் ...........இப்போது ஒரே ஒரு காரியம் அந்த வார்த்தை......எழுத்து கொல்லும்; ஆவியோ உயிர்ப்பிக்கும். என் முழு இருதயத்தோடு நான் நம்புவது என்னவென்றால் தேவன் துரிதப்படுத்துவார் (துரிதப்படுத்துதல் என்பது உயிர்ப்பித்தல் ஆகும்) இப்போது அவருடைய ஆவியால் அவருடைய வார்த்தையை உங்களில் உயிர்பிப்பார். இயேசு சொன்னார் விதைக்கரவன் ஒருவன் விதையை விதைத்தான். அவன் தூங்குகையில் வேறொருவன் வந்து நஞ்சை விதைத்தான். பின்பு அவர் தொடர்ந்து அந்த உவமை சொன்னார். அவர் சீசர்களுக்கோ அவர் சொன்னதை புரிந்துகொள்ளவில்லை, அவர் சொன்னார் "விதைக்கிறவன் மனுஷகுமாரன். நிலம் இந்த பூமி; மற்றும் விதையானது தேவனுடைய வார்த்தை." ஆமென். கவனியுங்கள் "விதையானது தேவனுடைய வார்த்தை." தேவனுடைய வார்த்தை யானது எதை சொன்னாலும், அது விதை தான். 41. இப்போ ஒரு நிலத்தை பயிரிடவேண்டும் என்றால், நிலத்தை முதலாவது பண்படுத்த வேண்டும். அது சரிதானே. அதில் உள்ள எல்லா முட்களையும், மற்றும் களைகளையும், கொடிகளையும் எடுத்து விட வேண்டும். அதுதான், அவிசுவாசமும் சந்தேகமுமாகும். உங்க இருதயத்திலிருந்து அவை எல்லாவற்றையும் பெருக்கி தள்ளுங்கள். ஆயத்தமாகுங்கள். அப்பொழுது அந்த நிலம் பண்படுத்தப்பட்டதாகும். வறண்ட கண்களை உடைய மனஸ்தாபத்தை நான் ரொம்பவும் விரும்பவில்லை. நான் ஒரு மனிதன் தேவனிடத்தில் வந்து, "என்னை மன்னியும் தகப்பனே, என்னை ஏற்றுக் கொள்ளும்" என்று சொல்வதை தான் விரும்புவேன். உடைந்து போன அந்த நிலம் வார்த்தைக்கு தயாராகுதலை விரும்புகிறேன்...... கவனியுங்கள், தேவனுடைய எந்த தெய்வீக வாக்குத்தத்தமும், ஒரு விதை தான். மற்றும் அந்த விதை சரியானது நிலத்தில் விதைக்கப்பட்டால், அது அதனுடைய தன்மைகளை உடைய உற்பத்தியை விளைவிக்கும் சோளம் விதைத்தால், சோளத்தை விளைவிக்கும். பார்லி, பார்லியை விளைவிக்கும். கோதுமை, கோதுமையை விளைவிக்கும். மற்றும் தேவனுடைய தெய்வீக வாக்குத்தம், நிலத்தில் விதைக்கப்பட்டு விசுவாசம், ஜெபம், நம்பிக்கை என்னும் தண்ணீர் ஊற்றப்பட்டால், அதின் பலனை தரும். தேவன் அதை நிறைவேற்றுவார். நான் இதை என்னுடைய அனுபவத்தில் இருந்து சொல்லுகிறேன். 42. இரண்டு வருடத்திற்கு முன்பு, ஐக்கிய நாடுகளில் சிறந்த மருத்துவர்கள் இருந்தனர் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் சொன்னார்கள் "மரியாதைக்குரிய பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் பிழைப்பதற்கு வாய்ப்பே இல்லை." ஓ அது என் இருதயத்தை பாட செய்கிறது. "அற்புதமான கிருபையே! உம்முடைய இனிமையான குரல், ஈனனாகிய என்னைஇரட்சித்ததே." [ஒலி நாடாவில் காலியிடம்] அங்கே மாயோ ஆஸ்பத்திரியில் நான் உட்கார்ந்து கொண்டிருக்கையில் அவர்கள் நீங்கள் உங்கள் உடம்பை கெடுத்துக்கொண்டீர்கள். மேலும் அதிலிருந்து வெளியே வரவே முடியாது." என்று சொன்னார்கள். நான் அந்த பழைய வார்த்தையை திருப்பினேன். "நீங்கள் ஜெபம் பண்ணும் போது எதையெல்லாம் கேட்டுக்கொள்வீர்களோ, அதை பெற்றுக்கொண்டீர்கள் என்று விசுவாசியுங்கள். மற்றும் அது உங்களுக்கு கொடுக்கப்படும்." நான் சொன்னேன் "பிதாவே அதை என்னுள்ளத்தில் நட்டு வையும், நான் விசுவாசத்தோடு அதற்கு இரவும் பகலும் தண்ணீர் ஊற்றுவேன்; இன்றிரவு நான் பரிபூரண சுகத்துடன் நிற்கிறேன்." ஒருமுறை ஒரு குருடன் என் கரங்களை பிடித்து நடத்தி சென்றார். என்னால் ஒன்றுமே காணமுடியவில்லை. என் கண் முன்னாள் பொருட்கள் அசைவது போல இருந்தது. பகல் வெளிச்சம் இருளாய் இருந்தது. மேலும் இந்த இருவு எனது கண் பரிசோதனையில் 20/20 என்பதாக இருந்தது. ஏன்? நான் தேவனுடைய வார்த்தை நம்பினேன். ஒருவரும் அந்த ஆவியை விரட்டுவதற்கான ஒரு வரம் கிடைக்கவில்லை. தேவனுடைய வார்த்தையின் மீது விசுவாசம் வைத்தால் அந்த வார்த்தை மட்டும் அதை செய்யும். 43. தேவனுடைய எல்லா சிறந்த குணாதிசயங்கள் இயேசுவினிடத்தில் இருந்தது. நீங்கள் அதை நம்புகிறீர்களா? அவருக்கு வல்லமை மேல் வல்லமை இருந்தது. ஆனால் அவர் சாத்தானை சந்தித்தபோது . அவர் தன்னுடைய வல்லமையை உபயோகிக்கவே இல்லை. மிகவும் பலவீனமான கிறிஸ்தவர்களுக்கு அவர் ஒரு மாதிரியாக இருந்தார். அவர் சாத்தானை சந்தித்தபோது அவர் சொன்னார், "மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று எழுதி இருக்கிறதே. மிகவும் பலவீனமான கிறிஸ்தவன் அதன் மேல் நிற்கலாம். நிச்சயமாக. தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் எதிராளியை அவர் சந்திக்கும் போது "அது எழுதியிருக்கிறது" என்று அவர் சொன்னார். அவருக்கு அதை செய்ய வல்லமை இருந்தது என்று நான் நம்புகிறேன். ஆனால் அவர் சாத்தானை அவனுடைய அதே அடிப்படையில், அதே வார்த்தையில் சந்தித்தார், நீங்களும் "அது எழுதியிருக்கிறதே" என்ற அடிப்படையிலேயே அவனை சந்திக்கலாம். நீங்கள் நம்புகிறீர்களா? ஏன் அது அப்படி எழுதி இருக்கிறது என்று. "நீங்கள் ஜெபிக்கும் போது, எவையெல்லாம் கேட்கிறீர்களா, அவைகளை பெற்றுக் கொண்டோம் என்று நம்புங்கள்." வார்த்தையின் வரிசையை கவனியுங்கள். எவையெல்லாம் கேட்கிறீர்களா, அவைகளை பெற்றுக் கொண்டோம் என்று நம்புங்கள்." இப்பொழுது பெற்று கொண்டோம் என்று நம்புங்கள் (நிகழ் காலம்) மற்றும் அது உங்களுக்கு கொடுக்கப்படும். அது பிற்காலத்தில் கொடுக்கப்படும், ஆனால் இப்பொழுது நம்புங்கள். உங்கள் செடிகள் வளருவதற்கு முன்பு முதலாவது விதையை விதைக்கவேண்டும். தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் வளர்ச்சியை விசுவாசிக்க வேண்டும். அது வளருகிறது என்று ஒவ்வொரு காலையிலும் அதை தோண்டி பார்க்க மாட்டீர்கள். ஒவ்வொரு முறையும் அதை தோண்டினால், அது வளர்வதற்கு அவ்வளவு நேரம் பிந்தும். நீங்கள் தோண்டிக்கொண்டே இருந்தால், அது வளரவே வளராது. 44. சகோதரியே, சிறுவனே, சகோதரனே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் தேவனால் சுகம் பெற்றுவிட்டீர்கள் என்று உங்கள் இருதயத்தில் விசுவாசம் கொள்வீர்கள் என்றால் அதை நம்புங்கள். தேவனை அவருடைய வார்த்தையில் நம்புங்கள், மேலும் அதை குறித்து சாட்சி பகிருங்கள். அதற்கு அதிகமான தண்ணீர் ஊற்றுங்கள், உரம் போடுங்கள். என்ன நடக்கிறது என்று கவனியுங்கள். தேவனுடைய வார்த்தை என்ன உரைத்ததோ அதை சரியாக, அப்படியே செய்யும். வானமும் பூமியும் ஒழிந்து போகும், ஆனால் என்னுடைய வார்த்தையோ ஒழிந்து போவதில்லை. "தேவனாகிய நானே அதை நட்டேன்; ஒருவரும் என் கைகளில் இருந்து பறிக்காதபடிக்கு, அதற்கு இரவும் பகலும் தண்ணீர் பாய்ச்சுவேன்." அங்கே தான் நீங்கள், தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார். தேவன் எதை வேண்டுமானாலும் பேசுவார், சொன்னதில் மாறமாட்டார். தேவன் அதை சொல்கிறார். அநேக காரியங்கள் நடைபெற்றன, அது தேவன் சொன்னதாக இருந்தது. "வெளிச்சம் உண்டாக கடவதென்று" தேவன் சொன்னார். உடனே வெளிச்சம் சிரிஷ்டிகரிடமிருந்து, எங்கிருந்தோ உதித்தது. தேவன் சொன்னார் "இது உண்டாக கடவது" என்றார். மற்றும் அது உண்டாயிற்று. "அது உண்டாகக் கடவது" என்றார், அது உண்டாயிற்று, தேவன் எதை பற்றி சொன்னார் என்றால், அது விதையை பற்றியதாக இருந்தது . தேவன் அவருடைய வார்த்தையில் இருந்தார். நீங்கள் நம்புகிறீர்களா? 45. அவர் சொன்னார, "என் பிதா வாக்குத்தத்தம் பண்ணினதை இதோ நான் உங்களுக்கு அனுப்புகிறேன், நீங்கள் உன்னதத்தில் இருந்து வரும் பலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், எருசலேம் நகரத்தில் இருங்கள் என்றார்." ஆமாம், அது ஆண்டவருடைய வார்த்தையாக இருந்தது. கிறிஸ்துவே வார்த்தையாக இருந்தார். ஓ, ஆதியிலே வார்த்தை இருந்தது; அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது, அந்த வார்த்தை தேவனாக இருந்தது; அந்த வார்த்தை மாம்சமாகி, நமக்குள்ளே வாசமாயிருந்தார்." நீங்கள் சொல்கிறீர்கள், "நல்லது, தேவன் கட்டளைகளை கொடுத்தார், மற்றும் தேவன் இதை சொன்னார். கிறிஸ்து சொன்ன எல்லாமே தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது. பிதா குமாரனிலிருந்து, அவர் மூலமாக பேசுகிறார், "நீங்கள் உன்னதத்தில் இருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், எருசலேம் நகரத்தில் இருங்கள்." ஓ, தேவன் தம்முடைய வார்த்தையிலிருந்து தம்மையே வெளிப்படுத்துகிறார். 46. அவர் ஒரு மனிதனிடம், "நீ போய் சீலோவாம் (அனுப்பப்பட்டவன்) குளத்தில் கழுவு என்றார்." மற்றும் அந்த மனிதன் அவருடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அந்த குளத்தில் கழுவி, சுத்தமாக திரும்பி வந்தான். தேவன் தம்முடைய வார்த்தையில் இருந்தார், நீங்கள் அதை நம்புகிறீர்களா? தேவன் அவருடைய பிரபஞ்சத்தில் இருக்கிறார். தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார். தேவன் அவருடைய வார்த்தையை உறுதிப்படுத்துவார். அன்று அந்த பெந்தேகோஸ்தே நாளில், அவர்கள் எல்லாம் ஒரு சிறிய அறையில், பயந்து, கோழைகளாக அந்த சுவருக்கு பின்னால் உட்கார்ந்து கொண்டு, தங்கி இருந்தனர், ஆனால் அவர்களுக்கு ஒரு கட்டளை இருந்தது, உன்னதத்தில் இருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும், எருசலேம் நகரத்தில் இருக்க வேண்டியதாக இருந்தது. அதோ அவர்கள் அங்கே, நூற்றிருபது பேர்கள் அந்த மேல் வீட்டு அறையில் கூடினார்கள். அந்த கதவுகளை எல்லாம் பூட்டினார்கள், அங்கே ஏதாவது ஜன்னல் இருந்திருந்தால் அதையும் மூடினார்கள். அதற்குப் பிறகு திடீரென்று பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கம் உண்டாகி, அவர்கள் இருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று. அவர்கள் வெளியே வீதியில் தங்கள் மனித கௌரவதிற்கு வெட்கப்படாமல் சென்றனர். அந்த பெந்தேகோஸ்தே நாளில் நாடு முழுவதும் இருக்கும் மேற்குடி மகன்கள் எல்லாம் கூடியிருந்தனர். அவர்கள் வீதிகளில் வெறிக் கொண்டவர்கள் போல தள்ளாடி, கரங்களை வீசிக்கொண்டு, ஒரு கூட்ட பைத்தியக்கார்கள் போல சென்றார்கள். அது தவறு என்று, வேதாகமத்தை மறுதலிக்கிறீர்களா? வேதாகமம் அவர்கள் வெறித்திருந்தார்கள் என்று சொல்லுகிறது . 47. மற்றும், ஆலயத்தில் உங்கள் பெயர்கள் இருகிறதாக நினைக்கும் பெண்களே, கேளுங்கள். நல்லது. கன்னி மரியாளும் அவர்களுடன் வெறிக் கொண்டவள் போல இருந்தாள். ஆண்டவருடைய தாயாரையே தேவன் பரிசுத்த ஆவியை பெற்றுக்கொள்ளாமல் பரலோகத்திற்கு அனுமதிக்கவில்லை என்றால், எப்படி அதற்கு குறைவாக இருக்கும் நீங்கள் செல்வீர்கள்? அது சரிதானே? தேவனை நிந்தித்த சிலருடன், நீங்களும் வழி வகுப்பீர்கள். அவர்கள் சொன்னார்கள், "ஏன் இந்த மனிதர்கள் குடித்து வெறித்திருக்கிறார்கள்." அங்கே, பெண்கள் மற்றும் எல்லாரும் இருந்தார்கள். நீங்கள் ஒரு மது அருந்திய குடிகாரனை கண்டிருக்கிறீர்களா? அவனிடம் எல்லாம் சரியாக தான் இருக்கும் என்று நினைப்பான். தள்ளாடிக்கொண்டு, எதிர் நிற்பவைகளுடன் முட்டிக்கொண்டு, "அது நல்லது" குடிகாரனை பாருங்கள்? சொன்னார், மதுபானத்தினால் வெறித்திராதிருங்கள். அது பாம்பை போல கடிக்கும், விரியனை போல தீண்டும். ஆனால் ஆவியில் வெறித்திருங்கள். வெறித்திருங்கள். உங்கள் பழைய காலத்தை மறக்கும் வரைக்கும், தேவனுடைய அன்பில் வெறித்திருந்து, தேவன் இப்பொழுது என்ன செய்கிறார் என்பதை மட்டும் அறியுங்கள். இன்றைக்காக மட்டும் வாழுங்கள். தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார்........ஆமாம் ஐயா. 48. அப்புறம் கவனியுங்கள், அவர்கள் எல்லாரும் அந்த விதமாக வெரித்தவர்களை போல இருக்கும் போது, அவர்கள் எல்லோரையும் பார்த்து நகைத்து, கேலி பரியாசம் செய்தனர். அந்த பரியாசக்காரர்கள் அங்கே மரிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் மரித்திருக்கலாம், ஆனால் ஆவி இன்னும் ஜீவிக்கிறது. இதை கவனியுங்கள். அதற்கு பிறகு, அ, ஆ, இ கூட தெரியாத ஒரு சிறிய முதிர்ந்த மனிதன், பேதுரு (தன்னுடைய கை ஏழுத்தைக் கூட போட தெரியாதவன்) எழுந்தான். வேதாகமம் சொல்லுகிறது, (அவன் படிக்காதவனும், ஒன்றும் அறியாதவனுமாக இருந்தான்) என்று. அவன் பெட்டியின் மீது ஏறி நின்று சொன்னான், "யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்கள் எல்லோரும் அறிந்துக் கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்கு செவிக்கொடுங்கள். நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறிக்கொண்டவர்கள் அல்ல, பொழுது விடிந்து, மூன்றாம் மணி வேளையாயிருக்கிறதே. ஆனால் இது அதுவாக இருக்கிறது. "வார்த்தைக்கு திரும்புங்கள்" தீர்க்கதரிசி யோவேலினால் உரைக்கபட்டபடியே இது நடந்தேருகிறது. கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். சகோதரன் பேதுரு சொன்னார், "இது தான் அது." இது அதுவாக இல்லை என்றால், அது வரும் வரைக்கும் நான் இதை வைத்திருப்பேன். ஆமாம் ஐயா, ஏனென்றால் உரைக்கப்பட்டது தான் இது, என்று நான் விசுவாசிக்கிறேன். தேவன் தம்முடைய வார்த்தையிலிருந்து அவருடைய ஜனங்களுக்கு உரைக்கிறார். தேவன் அதை செய்வேன் என்று சொன்னார். தேவன் அதை செய்வார். தேவனுடைய வார்த்தையை எடுத்து, அதை பாருங்கள். 49. இப்போது, இந்த வார்த்தையை உறுதிப் படுத்துவதற்காக அவர் தம்முடைய தீர்க்கதரிசிகளை அனுப்பினார். அவருடைய அடையா ளங்களை, அவருடைய அற்புதங்களை அனுப்பினார். மற்றும் இவை எல்லாவற்றிலும் தேவன் தம்முடைய ஜனங்கள் மத்தியில் அசைவாடும் போது மனிதனின் இருதயத்தில் உள்ள ரகசியங்களை சபையில் வெளிப்படுத்துகிறார். முதலாவது, அஸ்திபாரமாக இருந்த வார்த்தையானது, எதை சொன்னதோ, அதை அவனுக்கு சொல்லி, அதை செய்ய சொன்ன பிறகு, தீர்க்கதரிசி வந்து, இருதயத்தின் இரகசியங்களை வெளிப்படுத்தி, அவன் என்ன செய்யவேண்டும் என்று அவனுக்கு சொல்லுகிறார். இதை எல்லாம் அறிந்தும், நீங்கள் பயப்படுவீர்கள் என்று என்னிடம் சொல்லுகிறீர்களா? ஏன்? ஓ, நான் இப்போது சொல்கிறேன், தேவன் அதை இரண்டு விசை உறுதிப்படுத்தியுள்ளார். அது சரிதானே. தேவன் தம்முடைய பிரபஞ்சத்தில் இருக்கிறார், தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார்...... இப்போது, தேவன் தம்முடைய குமாரனில் இருப்பதை சீக்கிரம் பார்ப்போம். தேவன் கிறிஸ்துவுக்குள், இருந்தார் என்று நம்புகிறீர்களா? நான் என் முழு இருதயத்தோடும் நம்புகிறேன். வேதம் சொல்கிறது, தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து இந்த உலகத்தை தமக்குள் சமரசமாக்கிக் கொண்டார். அவர் இம்மானுவேலராக இருந்தார். வேறு வார்த்தையில் சொல்ல போனால், அவர் யெகோவா தேவனின் தற்சுருபமாக இந்த உலகத்தில் வெளிப்பட்டார், மாம்சத்தில் யெகோவா தேவன் திரை நீக்கப்பட்டு, இந்த உலகத்தில் வாழ்ந்தார். பிதாவின் மடியில் இருந்து பிறந்த ஒரே பேறான குமாரன். 50. கவனியுங்கள். பாவத்தின் தண்டனையை அனுபவிக்க தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார், ஏனென்றால் அவர் தான் பாவத்தை குறித்து அறிவித்தார். அவர் தான்.........?......இந்த தண்டனையை பாவத்திற்காக அறிவித்தார்.மற்றும் அவரை தவிர வேறொரு நபரை அதற்கு ஈடு செய்யமுடியாது. "உங்கள் இடத்தை என் மனைவியோ, என் மகனோ, என் மகளோ அல்லது யாராகிலும் எடுத்துகொள்வார்கள்" என்று சொல்வது எனக்கு நியாயமல்ல. நான் நீதியுடையவனும், சர்வ வல்லமையுடவனாக இருந்தால் உங்கள் இடத்தை எடுத்துக்கொள்ளலாம் . மேலும், பாடுபடுவதற்காக இயேசு கிறிஸ்துவாகிய தம்முடைய குமாரனுக்குள், தேவன் வந்தாக வேண்டும். அது சரிதானே. மற்றும் தேவனின் இரத்தம் அவருடைய சரீரத்தில் இருந்து வடிந்தது. ஆமாம் ஐயா, தேவன் தம்முடைய குமாரனில் இருந்தார். அவர் ஒரு மனிதனை போல உண்டார். அது சரியா. ஜனங்களிடம் பேசும்போது அவர், ஒரு மனிதனை போல பேசினார். (அது சரியா) ஆனால் உங்களுக்கு ஒன்று சொல்கிறேன், ஒரு விசை சில போர் வீரர்கள் அவரை எடுத்து செல்ல வந்து, திரும்பி சென்ற போது, அவர்கள், "ஒரு மனிதனும் கூட இவர் பேசினது போல பேசவில்லை" என்று சொன்னார்கள். அவர் ஒரு மனிதனாக இருந்தார், ஆனால் அவரிடமிருந்து தேவன் பேசினார். அன்று நான் சொன்னது போல, அவர் லாசருவின் கல்லறையின் அருகில் நின்றுகொண்டிருந்த போது, அவர் கன்ன த்திலிருந்து, கண்ணீர் வடிந்தது. அவர் ஒரு மனிதனாக இருந்தார். ஆனால், "லாசருவே வெளியே வா!" என்ற போது, நான்கு நாட்களுக்கு முன் மரித்த மனிதன் மீண்டும் உயிர் பெற்றான். அது தேவன் தம்முடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவுக்குள் இருந்து பேசினது. ஆமாம் ஐயா. 51. அவர் தெய்வ மனிதனாக இருந்தார். அவர் கன்னி மரியாளிடம் பிறந்த தேவனின் முடிவில்லாத குமாரன் என்று நான் நம்புகிறேன். அது சரியா. அவரை என்னவாக இருந்தார், தேவன் தன் குமாரனில் இருந்தார் என்று வேதாகமம் சொல்லுகிற அனைத்தும், அது அப்படிதான் என்று நான் நம்புகிறேன். அவர் இந்த உலகத்தில் இருந்த போது அவர் தேவனை போல இருந்தார்; தேவனை போல பேசினார்; அவர் _ அவர் தேவனை போல பிரசங்கித்தார்; அவர் தேவனை போல உயிர்த்தெழுந்தார்; தேவனை போல எடுத்துக் கொள்ளப்பட்டார். தேவன் அவருக்குள் இருந்தார். தேவன் இந்த உலகத்தில், ஒரு மாம்சமாகிய சரீரத்துக்குள்ளே, தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ரூபத்தில் வெளிப்பட்டார். கவனியுங்கள், தேவன் தம்முடைய குமாரனில் இருந்தார். அவர் எப்பொழுதுமே.....தேவன் ஆதியில் இருந்ததை செயல்படுத்துகிறார். அவர், இஸ்ரவேலரோடே வனாந்தரத்தில் வந்துகொண்டிருந்த போது, ஒரு பாறை அங்கிருந்தது, அந்த பாறையை தொடர்ந்து ஆன்மீக பாறையும் சென்றது. மற்றும் தேவன் மோசேயிடம், "பாறையை அடி, அது தண்ணீரைக் கொண்டு வரும்" என்று சொன்னார். அது என்னவாக இருந்தது? அவன் கையில் இருந்த கோலை வைத்து அந்த பாறையை அடித்தான். அந்த கோல் மோசேயின் கோல் அல்ல; அது தேவனின் நியாயம் தீர்க்கும் கோலாகும். மற்றும் அவன் அந்த பாறையை அடித்தான், மேலும் அந்த பாறை தண்ணீரை கொண்டுவந்தது. 52. மற்றும் குடிப்பதற்கு தண்ணீர் தேவைபட்டால் அவர்கள் அந்த பாறையிடம் செல்லுவார்கள். அவர்கள், உண்பதற்கு ஏதாவது தேவைபட்டால், அவர்கள் கீழே சென்று பார்த்தால் அங்கு ஒரு கூட்ட தேனிக்கள் கூடு கட்டியிருக்கும். அந்த பாறையில் ஒரு பிளவு இருக்கும். தேவன் அந்த பிளவில் நின்றுகொண்டிருந்தார். தேனீக்கள் அந்த பிளவில் கூடு கட்டி இருந்தது. அவர்களுக்கு எது தேவை பட்டதோ, உடனே அவர்கள் அவர்கள் அந்த கன்மலையிடம் சென்றனர். மற்றும் அந்த வனாந்திரத்தில் கிறிஸ்துதான் அந்த கன்மலை என்று வேதாகம் தெளிவாக போதிக்கிறது. நீங்கள் இந்த இரவு தாகமாய் இருப்பீர்கள் என்றால், அந்த கன்மலையிடம் செல்லுங்கள். உங்களுக்கு இனிமையான தேன் வேண்டும் என்றால், அந்த கன்மலையிடம் செல்லுங்கள். உங்களுக்கு ஜீவன் வேண்டுமென்றால் அந்த கன்மலையிடம் செல்லுங்கள். உங்களுக்கு தேவன் தம்முடைய குமாரனில் இருந்தார் என்று நம்பவேண்டும் என்றால், அந்த கன்மலையிடம் செல்லுங்கள். அவர் கன்மலையில் இருந்தார். அந்த கன்மலையிடம் பேசுங்கள், அப்பொழுது அது தன்னுடைய தண்ணீரை கொடுக்கும். தேவன் தம்முடைய குமாரனில் இருக்கிறார். அங்கே தான் நீங்கள் இருக்கிறீர்கள் . 53. ஒரு நாள், தேவனுடைய வார்த்தையை விசுவாசித்த கொஞ்சம் ஜனங்கள், பாபிலோனில் இருந்தனர். சில கணங்களுக்கு நாம் அதை கவனிப்போம். மேலும், ஓ எனக்கு ஒரு பெரிய காரியம் நடப்பதாக தெரிகிறது. அங்கே ஒரு பிரச்சனை உருவாகி இருந்தது, அது என்னவென்றால், அரசாங்கம் உருவாக்கிய தெய்வத்தை வணங்காமல், அல்லது வேறு தெய்வத்தை வணங்கினாலோ, அவர்களை அக்கினி சூளையில் எரியவேண்டும் என்ற கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அங்கே மூன்று இளைஞர்கள் இருந்தனர். நான்கு பேர்களில், முக்கியமா மூன்று பேர்கள் இருந்தனர். சாத்ராக், மேஷாக், ஆபெத்நேகோ. அவர்கள் எந்த உருவத்தையும் வணங்குவதில்லை என்று தீர்மானித்தனர். அவர்கள் உண்மையான தெய்வத்தையே சேவிப்போம் என்று தீர்மானித்தனர். அவர்கள் அவருடைய வார்த்தையை நம்பினார்கள். நல்லது. கவனியுங்கள். இந்த மூன்று இளைஞர்கள் அதை வணங்குவதில்லை என்பதை கண்டுபிடித்தனர். ஆகையால் ராஜாவின் கட்டளைக்கு இணங்க அவர்கள் அந்த சூளையில் இருந்த வெப்பத்தை காட்டிலும், ஏழு மடங்கு சூடாக்கினர். அவர்கள், "அவர்களின் மதத்தை சுட்டெரித்துவிடுவோம்" என்று சொன்னார்கள். ஒரு மனிதனிடத்தில் உள்ள பரிசுத்த ஆவியை, உங்களால் எரிக்க முடியாது. ஏன்? அது ஏற்கனவே நெருப்பாக இருக்கிறது. அதை உங்களால் எரிக்க முடியாது. வெளிப்பாடுகளை அளித்த சகோதரன் யோவானை, ஒரு கொப்பரையில் எண்ணை ஊற்றி இருபத்து நான்கு மணி நேரத்திற்கு வேகவைத்தனர். அவர்கள் அவன் ஒரு மந்திரவாதி என்று நினைத்தார்கள். 54. அன்றொரு நாள் இந்த ஆலையத்திற்கு யாரோ ஒரு மனிதன் வந்தார். அவர் சொன்னார், "ஹெய்...." ஒரு சகோதரன் அவருக்கு அட்டையை கொடுக்க முற்பட்டார். அவரோ சிரிக்க ஆரம்பித்தார். சில ஊழியக்கார்கள் அதை பற்றி என்னிடம் சொன்னார்கள். நான் சொன்னேன், "அது......" நான், என்னுடைய செல்வவளத்தை பற்றி குறி கேட்க வந்திருக்கிறேன் என்று அவன் சொன்னான். ஓ என்ன, அவர்கள் யோவான் அந்த எண்ணெயை மந்திரத்தினால் கட்டுபடுத்தினான் என்று நினைத்தார்கள். அந்த எண்ணெயை யோவான் கட்டுபடுத்தவில்லை, அது அந்த பரிசுத்தஆவி தான் அவனை கட்டுக்குள் வைத்திருந்தது. அந்த எண்ணெய் அவனை சுட்டெரிக்க முடியவில்லை. இந்த எபிரேய பிள்ளைகள் தேவனுடைய வார்த்தையை நம்பினர். அவர்கள் சொன்னார்கள், "தேவன் எங்களை இந்த எரிகிற சூலையிலிருந்து விடுதலையாக்க முடியும், அப்படி அவர் விடுதலை தரவில்லை என்றாலும், நீர் நிறுத்திய சிலையை நாங்கள் வணங்கமாட்டோம்." என்றனர். ஓ, இந்த கட்டிடத்திற்குள்ளே சில சாத்ராக் போன்றவர்கள் நமக்கு கிடைப்பார்கள் என்றால். சொன்னேன், "நான் உன்னில் எந்த ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை, அங்கே செல்லுங்கள், யாராவது உங்களுக்கு ஜெபிப்பார்கள். உன்னிடத்தில் ஒரு வித்தியாசத்தையும் காணவில்லை. "நீ என்ன வேண்டுமென்றாலும் சொல்லு, ஆனால் நான் உன் அவிசுவாசத்திற்கு தலை வணங்க மாட்டேன். நான் தேவனை அவர் வார்த்தையில் எடுக்கிறேன்." அது சரியா. தேவன் அவர் வார்த்தையில் இருக்கிறார். 55. சற்று நேரத்திற்கு முன்பு, துவங்கிய இந்த காட்சியை கவனிப்போம். தேவன் எப்படி நமக்கு பரிசளிப்பார் என்று பார்க்க தேவன் நமக்கு உதவவேண்டும். ஓரு நொடிக்கு இந்த பாடத்திலிருந்து விலகி இருப்போம். காலை பொழுது வருவதை என்னால் பார்க்கமுடிகிறது. இதை இப்போது சற்று நடித்து பார்ப்போம். நான் அந்த அக்கினி சூளையை பார்கிறேன். வானம் குறிப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் மாறுவதை பார்க்கிறேன். அந்த சூலை எரிந்து கொண்டு இருந்தது. சிம்மாசனத்தில் இராஜா நேபுகாத்நேச்சார் அமர்ந்துக்கொண்டு, "அந்த பரிசுத்த உருளர்கள் கூட்டத்தை எரித்து, இந்த ஆர்ப்பாட்டத்தை நிறுத்தி விடலாம்" என்று சொல்வதை என்னால் பார்க்கமுடிகிறது. தொடர்ந்து அங்கு செல்லுங்கள், "இங்கு நடந்துகொண்டிருக்கிற காரியத்தை பார்த்து நான் சோர்ந்து போய்விட்டேன்." நல்லது. சூளையை நெருப்பூட்டுவதற்கு அவர்கள் தயார் ஆகிக்கொண்டிருப்பதை நான் பார்க்க முடிகிறது. சாத்ராக், மேஷாக் ஆபேத்னகோ, அவர்களின் கைகளை பின்னால் கட்டி, இங்கே கொண்டு வாருங்கள். பெரிய ஈட்டிகளோடு, அவர்களை தூக்கி எரிவதற்கு மூன்று மனிதர்கள், தூபபீடத்தின் உச்சிக்கு ஏற, அணிவகுத்தனர். ஓ, கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராகவும், சுகம் கொடுப்பவராகவும் ஏற்றுக்கொள்ளும் போது, அந்த பிசாசு உங்கள் மேல் நெருப்பை போடமாட்டானா? அவன் நிச்சயமாக போடுவான். ஆமாம் ஐயா, சற்று அவனை கவனித்துப்பாருங்கள். 56. 72 மணி நேரத்துக்குள் என்ன நடக்கும் என்பதை குறித்து, உங்களுக்கு நான் எச்சரித்ததை ஞாபகங்கொள்ளுங்கள். வேதாகமம் சொல்லுகிறது, "ஒரு மனிதனிடத்தில் அசுத்த ஆவி வெளியே புறப்பட்டு சென்று வெறுமையான இடத்தில் சுற்றி திரிந்து, பின்பு திரும்பவும் முந்தி இருந்ததை விட மோசமான ஏழு ஆவிகளுடன் அவனிடம் வருகிறது. (அது சரிதானா) மிகவும் கவனமாக இருங்கள். வீட்டிலுள்ள, நல்ல மனிதன் அங்கே நின்றுக்கொண்டு, விசுவாசத்தில் அவனை விரட்டி அடித்து, நீ உள்ளே வரமுடியாது என்று அவனிடம் சொல்லட்டும். அதை பார்க்க மறுத்து விடவும்; அதை பெற்று கொள்ள மறுத்து விடவும்; வேறு எதையும் செய்ய மறுத்து விடவும். அதை விட்டு தூரமே சென்றுவிடுங்கள். கவனியுங்கள் (ஒலி நாடாவில் காலியிடம்) அவர்கள் மேலே செல்வதற்கு மரண அணிவகுப்பை தொடங்கினர். அவர்கள் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கும் இந்த ராஜரீக விசுவாசிகளை, எரிப்பதற்கு கொண்டு செல்கின்றனர். எரிப்பதற்காக அந்த சூளை இருக்கும் இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றனர். அவர்கள் நடந்து செல்கின்றனர், உங்களுக்கு தெரியுமா, அங்கே சாத்ராக் மேஷாக்கிடம், "நாம் எல்லாரும் ஜெபித்தோமா என்பது உனக்கு நிச்சயமாக தெரியுமா?" என்று சொல்வதை நான் கேட்கிறேன். அவன் பதில் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது, "ஆமாம், எனக்கு வெற்றி கிடைத்து விட்டது, நாம் போகலாம்." ஆமென். அந்த வகையில் தான் நாம் செய்ய வேண்டும். நேரே, சற்று உள்ளேயே அணிவகுத்தனர், சென்று கொண்டே, சென்று கொண்டே இருந்தனர். அவர்கள் சூளைக்கு அருகில் வந்து விட்டனர். அவர்களுக்கு கொஞ்சம் மயக்கம் வருவது போல இருந்தது. அவன் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது. "நல்லது, நீங்கள் இப்பொழுது ஆயத்தமாய் இருக்கிறீர்களா?" "ஆமாம் நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம்." 57. அவர்களை தள்ளி கொண்டு சென்றவர்கள், அவர்களுடைய தலைகளை பின்னால் பிடித்துக் கொண்டு நேரே சென்றனர். இன்னும், ஒரே ஒரு அடி தான், அவர்கள் நேரே, அந்த அக்கினி சூளையில் விழுந்து விடுவார்கள். அவர்களை எரித்து விடும். ஏன்? அவர்கள் பின்னால் நின்று கொண்டிருந்த அந்த மனிதர்கள், அந்த அகோர சூட்டினிமித்தம் மரித்து விட்டனர். ஈட்டியின் நீளத்திற்கு (அந்த கம்பத்தில் பாதி அல்லது கொஞ்சம் கூட) அவர்கள் பின்னால் மரித்து விட்டனர். இது என்ன காண்பிக்கறது என்றால், தேவன் அவர்களுடைய அணிவகுப்பில் கூடவே சென்றார். நீங்களும் அவரை ஏற்றுக் கொண்டால், இந்த இரவு அவர் சரியாக உங்களுடனும் கூட இருப்பார். அவருடைய வார்த்தையில் தரித்து நில்லுங்கள், மேலும் அவர் தம்முடைய வார்த்தையிலும் தம்முடைய குமாரனிலும் இருக்கிறார் என்பதை நம்புங்கள். இதோ அவர்கள் அந்த சூளையின் விளிம்பு வரைக்கும் அணிவகுத்துக் கொண்டு செல்கின்றனர், கவனியுங்கள், ஒரே ஒரு அடி எடுத்து வைத்தால், அவர்கள் அதற்குள்ளே விழுந்து விடுவார்கள். 58. விசுவாசிகளுக்கு நம்முடைய காட்சியானது இருண்டு தெரிகிறது, அது சரிதானே? நம்முடைய கேமராவை அல்லது நமது தொலை நோக்கி கருவியை திருப்பி மேலே நோக்குவோம். உங்களுக்கு ஒன்று தெரியுமா எல்லா நேரங்களிலும், இந்த பூமியில், ஏதோ ஒன்று நடந்து கொண்டிருக்கிறது, பரலோகத்திலும் நடந்து கொண்டிருக்கிறது. நான் அவரை பார்க்க முடிகிறது, ஒரு கணம் அவரை நாம் பார்க்கலாம். அவர் தன்னுடைய சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறதை நான் பார்க்கிறேன். (ஓ என்ன சொல்வேன்) அவருடைய ஆசாரிய வஸ்திர தொங்கல் அவரை சுற்றி இருந்தது. அவருடைய வலது பக்கத்திலிருந்து ஒரு சத்தம் வருவதை நான் கேட்கிறேன். என்ன சத்தம் அது? அது காபிரியேல் என்று சொல்லலாம். அந்த மகா பெரிய பிரதான தூதன், அவர் பக்கத்தில் ஓடி, அவருடைய வாளை இழுத்து, சொன்னான், "எஜமானனே! கீழே பாபிலோனை பார்த்தீர்களா? மூன்று உண்மையான விசுவாசிகள் தங்களுடைய முடிவை சந்திக்கின்றனர். அவர்களை கவனித்தீர்களா? என்னை சிருஷ்டித்த நாட்களிலிருந்து நான் உமக்கு கீழ்படிந்து இருக்கிறேன். என்னை கீழே அனுப்பும், நான் அந்த காட்சி முழுவதையும் சில நொடிக்குள், மாற்றிவிடுகிறேன். அவனாலே முடியும் என்று நான் நம்புகிறேன். நீங்களும் அப்படிதானே. ஆமாம், அவனாலே முடியும் என்று நம்புகிறேன். 59. அந்த பெரிய வாளை அவர் இழுக்கும் போது, தாவீது பார்த்திருக்கிறான். யோசுவா ஆற்றை கடக்கும் போது அவரை பார்த்திருக்கிறான். அவன் சொன்னான், "தேவனுடைய சேனைகளுக் கெல்லாம் நான் தலைவன். அந்த வால் ஓங்கி இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்." "எஜமானனே, என்னை கீழே அனுப்பும்" என்று சொன்னான். தேவன் சொல்வதை எனக்கு கேட்க முடிகிறது. "காபிரியேல், நீ ஒரு நல்ல தூதன். நான் உன்னை சிருஷ்டித்த நாளில் இருந்து, நீ எனக்கு கீழ்படிந்து இருக்கிறாய். ஆனால் என்னால் உன்னை அனுப்பமுடியாது. காபிரியேல் அந்த வாளை மீண்டும் அந்த உரையில் போட்டு, அவர் பக்கத்தில், அவன் இருக்க வேண்டிய இடத்தில், நேரே நிமிர்ந்து நிற்பதை பார்க்கிறேன். ஓ என்னே. பரலோகத்தில் உள்ள எல்லாமே அவருக்கு கீழ்படிந்து இருக்கிறது. அது நல்லது, மனிதனின் இதயத்தை தவிர மற்ற எல்லாமே அவருக்கு கீழ்படிந்தது. அவர்கள் அவருக்கு கீழ்படிய விரும்பவில்லை. அவரை நம்புவதற்கு அவர்கள் விரும்பவில்லை. 60. பாருங்கள், இடதுபக்கமாக வேறொரு தூதன் வருகிறான். அவனை பாருங்கள். தேவனுக்கு ஊழியும் செய்யும் ஆவிகளான தூதர்கள் இருந்தனர். இதை நான் நம்புகிறேன், தூரம் அல்ல இப்போதே, இங்கேயே அது உண்டு. மற்றும் அவன் அங்க நின்றான்.......அவனுடைய பெயர் என்ன எட்டி மரம் (wormwood), அப்படி என்றால் கசப்பான தண்ணீர் என்று அர்த்தம். அவன் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது." ஓ எஜமானனே, பாபிலோனுக்குள் என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா. நான், இந்த காலை வேலையில் அங்கு செல்லபோகிறேன். பிரளயத்துக்கு முன்னாள் நீங்கள் எனக்கு சாவியை கொடுத்தீர்கள். நான் இந்த பூமியின் மேல் தண்ணீரை ஊற்றினேன். உங்களுக்கு தெரியுமா......உலகத்தின் எல்லா தண்ணீர்களின் மேலும் எட்டி மரத்துக்கு அதிகாரம் உண்டு என்று வேதாகமம் சொல்லுகிறது. மற்றும் அவன் சொல்கிறான், "நான் கீழே சென்று, பாபிலோனின் முகத்தை, இந்த பூமியில் காணாதபடிக்கு துடைத்து விடுகிறேன்." அவன் அப்படி செய்திருப்பான் என்று நான் நம்புகிறேன். நீங்களும், அப்படிதானே நினைக்கிறீர்கள்? "ஆமாம் ஐயா." ஓ "அவன் சொன்னான் எஜமானனே கீழே அங்கே பாருங்கள்." அவர் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது, "எட்டி மரம், நீ ஒரு நல்ல தூதனாக இருந்து, எனக்கு கீழ்ப்படிந்து, ஆழத்தில் உள்ள ஊற்றுக்கண் எல்லாவற்றையும் திறந்து, நோவா காலத்தில், இந்த உலகத்தை அழித்து விட்டாய், ஆனால் என்னால் உன்னை அங்கு அனுப்ப முடியாது." அந்த எட்டி மரம், அவர் பக்கத்தில் உள்ள தன்னுடைய இடத்தில், கவனத்தில் நிற்பதை பார்க்கிறேன். 61. "அதை எண்ணிப் பார்த்தீர்களா?" என்று வேறொரு தூதன் கேட்டார். அவர் சொன்னார் ஆமாம் இரவு முழுவதும் நான் அதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தேன். ஓ சகோதரனே அவர் மூன்று பேர்கள் மேல் எண்ணம் கொண்டவராய் இருந்தார் என்றால், இங்கே இருக்கக்கூடிய 3000 பேர்கள் மேல் இந்த இரவு அவர் எண்ணம் உடையவராய் இருக்கிறார். அவருடைய கண்கள் சிட்டுக் குருவி மேல இருக்கிறது. உனக்கு என்ன தேவை என்று அவருக்கு இப்பொழுது நன்றாக தெரியும். இந்த கூட்டத்துக்கு நீ வந்ததன் நோக்கம் என்னவென்று அவருக்கு நன்றாக தெரியும். அவர் சொல்வதை என்னால் கேட்க முடிகிறது, என்னால் உன்னை அனுப்ப முடியாது, உங்கள் அனைவரையும் அனுப்ப முடியாது. காரணம், நான் நானே செல்ல போகிறேன். ஓ என்னே! அவர் எழுந்திருப்பதை நான் பார்க்க முடிகிறது. நான் பைத்தியக்காரன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் அல்லவா? என்னை பரிசுத்த ஊருளையர் என்று கூப்பிடுவீர்கள். எதுவாக இருந்தாலும் சரி. ஆகையால் நீங்களே சென்று அதைச் செய்யலாம். கவனியுங்கள் நான் அவரை நேசிக்கிறேன். அவருக்குள் சுற்றி இருக்கும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன். அவரை தவிர நான் ஒன்றும் காணேன். அவர் சிம்மாசனத்தை விட்டு எழுந்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அவருடைய வஸ்திர தொங்கல்கள் அப்படியே வெளியே வருகிறது. மற்றும் வட தேசத்ததில், ஒரு பெரிய இடி மேகத்தை பார்க்கிறேன். அவர் அதை பார்த்து, "இங்கே வா," என்று கூறுவதை பார்கிறேன். ஓ என்னே! அவர், "கிழக்கு திசை காற்றையும், தெற்கு திசை காற்றையும், வடக்கு மற்றும் தென் திசை காற்றையும், நோக்கி, இங்கே வாருங்கள்" என்று அழைப்பதை என்னால் கேட்க முடிகிறது. எல்லாமே அவருக்கு கீழ்படிகிறது. சரியா. அவர், "நீங்கள், அந்த இடி மேகத்திற்கு அடியில் சென்று, அதை அப்படியே சுருட்டி இங்கே கொண்டு வாருங்கள்" என்று சொல்வதை எனக்கு கேட்கமுடிகிறது. இதோ அந்த கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு திசை காற்றுகள் அந்த பெரிய இடி மேகதிற்கு அடியில் சென்று, அதை அப்படியே சுருட்டி கொண்டு, சிம்மாசனத்தின் பக்கத்தில் நிருத்துவதை என்னால் பார்க்க முடிகிறது. அவர் அதில் ஏறுவதை என்னால் பார்க்கமுடிகிறது. ஓ என்ன ஒரு மகத்துவம், அவர் சொன்னார் "காற்றுகளே, இந்த காலை வேலையில், உங்களை நான் குதிரைகளைப் போல சவாரி செய்வதற்கு உபயோகித்து, பாபிலோனுக்கு செல்லப்போகிறேன்." 62. அவர், தன் கரங்களால் ஒரு கோணல் மாணலான மின்னலை அப்படியே எட்டி பிடித்து, ஜீவ விருட்சத்தின் மரத்திலிருந்து ஒரு கிளையை பறித்துக்கொண்டு செல்வதை பார்க்கிறேன். தேவனுடைய வார்த்தையை நம்பி அவர்கள் தங்களுடைய கடைசி அடியை எடுத்து வைத்தனர். அவர்கள் சூளைக்குள் அடி எடுத்து வைத்த அந்த நேரத்தில் மனுஷ குமாரனை போல ஒருவர் அவர்கள் பக்கத்தில் நின்றுக் கொண்டு (அல்லேலூயா, ஆமாம் ஐயா) ஒரு பனைமரத்தின் கீற்றை வைத்து வீசிக்கொண்டு இருந்தார். அனல் காற்று வீசிக்கொண்டு இருக்க, அவர் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். நேபுகாத்நேச்சார் ராஜா கதவுகளை திறந்த போது, "எத்தனை பேர்களை உள்ளே போட்டீர்கள்" என்று. கேட்டார். அவர்கள், "மூன்று" என்றனர். அவர், "அங்கே நான்கு பேர்களை பார்க்கிறேன், மற்றும் ஒருவர், தேவகுமாரனை போல இருக்கிறார்" என்றார். அவர் நேற்றம் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். அவருடைய வல்லமை தோல்வி அடையாது. அவரால் அது முடியாது. தேவன் தம்முடைய குமாரனில் இருக்கிறார். ஆமாம் நீங்கள் அதை நம்புங்கள். தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். இன்று இரவு தேவன் இங்கே இருக்கிறார். 63. பெந்தேகோஸ்தே நாளன்று, தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் வெளிப்பட்டார். அந்த பழைய மீன் பிடிப்பவன் அங்கே நின்று, அந்த பிரசங்கத்தை செய்யும்போது, பிசாசின் கண்களுக்குள் பாதாளத்தின் கட்டுகளை எல்லாம், அவன் அசையும் படி செய்யும் போது, 3000 பேர்கள் தேவனுடைய இராஜியத்தில் வந்து சேர்ந்துக் கொண்டனர். மறுநாள் அவன் அந்த வாசலில் படுத்துகிடந்த ஒரு முடவன், சுகம் பெரும்படி மீண்டும் பிரசங்கித்து சுகம் பெற செய்தான். அவன், அவனை சுகபடுத்தினான். மற்றும் ஐந்தாயிரம் ஆத்துமாக்கள் தேவனுடைய ராஜியத்துக்குள் வந்து சேர்ந்தனர். தேவன் அவருடைய ஜனங்களுக்குள் இருக்கிறார் ......... ஆமாம் ஐயா. அங்கே, சிறு ஸ்தேவான் நின்று கொண்டிருப்பத்தை என்னால் பார்க்க முடிகிறது. அந்த பெரிய சனகெரிப்பு சங்கத்தில், ஐந்து லட்சம் மக்கள் அந்த காலை வேலையில் கூடி நின்றுக் கொண்டிருக்கையில், ஒரு ஏழை சிறு பையன் அங்கே நின்றிக்கொண்டிருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. மற்றும் வேதாகமம் அவனுடைய முகம், ஒரு தேவ தூதன் போல இருந்தது என்று செல்லுகிறது. தேவன் தம்முடைய ஜனங்களில் இருந்தார். அவன் சொன்னான் "ஓ, இருதயத்தையும் காதுகளையும் விருத்தசேதனம் பண்ணாத வணங்கா கழுத்துள்ள நீங்கள், பரிசுத்த ஆவியை ஏன் எதிர்க்கிறீர்கள்? உங்கள் பிதாக்கள் செய்தது போல நீங்களும் செய்கிறீர்கள். அவர்கள் பற்களை கடித்துக் கொண்டு அவன் மேல் விழுந்தனர். மற்றும் அவனை கல்லால் அடித்து கொல்லும்போது, அவன் தன்னுடைய சிறு தலையை தேவனுடைய மடியில் வைத்துக்கொண்டு, அவன் சொன்னான், "தேவனுடைய வலது பாரிசத்தில், இயேசு நின்று கொண்டிருப்பதை என்னால் பார்க்கமுடிகிறது. "........தேவன் அவனை தூங்குவதற்காக தம்முடைய மடியில் தாலாட்டிக் கொண்டிருந்தார். எப்படி ஒரு தாயானவள் தன்னுடைய குழந்தையை தாலாட்டுகிறாளோ அப்படியே, தேவன் அவனை தாலாட்டிக் கொண்டிருந்தார். தேவன் தம்முடைய ஜனங்களில் இருக்கிறார். 64. என்னால் அந்த இலக்கண பள்ளி படிப்பில்லாத அந்த வயதான மீன் பிடிப்பவனை என்னால் பார்க்க முடிகிறது. அவனுக்கு தன்னுடைய சொந்த கையெழுத்தைக் கூட போட அறியாதவனும், மற்றும் படிப்பரியாத அந்த மனிதனுக்குள், அவ்வளவாக தேவன் அவனிடம் இருந்ததினால், அந்த தெரு வழியாக நடந்து செல்கின்ற மக்கள், அவனுடைய நிழல் தங்கள் மேல் படும்படியாக, படுத்து கிடந்தனர். எல்லாரும் சுகம் பெற்றனர். ஏன்? தேவன் தம்முடைய ஜனங்களில் இருக்கிறார். அல்லேலூயா. .....?......அவர்கள், அவரை கொல்லும் போது அவர் சொன்னார், "ஒரே ஒரு மனஸ்தாபம் தான் எனக்கு உண்டு; தேவனுடைய மகிமைக்காக ஐந்து ஜீவன்களை என்னால் கொடுக்கமுடிய வில்லை." தேவன் அவருடைய ஜனங்களில் இருத்தல்.....ஆமாம் ஐயா. அப்போஸ்தலர் பேதுருவை அவர்கள் கொல்வதற்கு அழைத்து சென்ற போது. "என்னை தலைக்கீழாக அறையும். நான் என் தேவன் மரித்தது போல மரிக்க நான் தகுதி அற்றவன்." ஓ என்ன. அந்திரேயாவுடைய சிலுவை, எப்படி அவன்........அவனை அவர்கள் கொன்று விட்டனர்; எப்படி அவர்களை தீக்கு இரையாக்கினர். அவர்களை சிங்கங்களுக்கு இரையாக்கினர். அவர்களை வாளால் அறுத்தனர். அவர்களை சிறைச்சாலையில் போட்டனர். அவர்கள் பைத்தியம் பிடித்தவர்கள் என்று கூறினர். கதவுகளை அடைத்தனர். பட்டணத்தை விட்டு துரத்தப்பட்டனர். மற்றும், தேவன் அவருடைய மக்களில் இருக்கிறார். சிலர்..... 65. ஏப்ரல் 6 ஆம் தேதி 1909 ஆம் வருடம், சூரியன் அந்த சிறு கென்டக்கி மலையிலிருந்து எட்டி பார்த்துகொண்டு இருக்க, 14 வயது போல நிரம்பிய ஒரு ஏழை தாய், மண் தரையில், கரடு முரடான ஒரு படுக்கையில் உட்கார்ந்துகொண்டு இருந்தாள். மற்றும் ஒரு சிறிய மேஜை, ஒரு சிறிய பழைய வைக்கோலான ஒரு படுக்கையும், தலை சாய்க்க ஒரு உமியிலான சிறிய தலையணையும் இருந்தது. எனது தகப்பனார் ஒரு ஜோடி மேலாடையை அணிந்து கொண்டு, படுக்கையின் கால்மாட்டில் நின்றுகொண்டிருந்தார்.... ஆனால் தேவன், இந்த உலகத்தில் நான் வரவேண்டும் என்பதற்காக அதை அனுமத்தித்திருந்தார். காலை நட்சத்திரம் அந்த மலைகளிலிருந்து எட்டி பார்த்துகொண்டு இருக்க, ஜன்னல் வழியாக இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் சுற்றிக்கொண்டு அந்த அறையில் வந்தது, அந்த மலையில் நின்றுகொண்டிருந்த மக்கள் அழ துவங்கி விட்டனர். ஓ என்னே. [ஒலி நாடாவில் காலி இடம்] பல வருடங்கள் கழித்து, ஒரு இரவு ஒரு பழைய அறையில் நின்றுக்கொண்டு, குளிரின் மத்தியில் என் முழு இருதையத்தோடு ஜெபித்துக் கொண்டிருக்கும் போது இதோ, அந்த இயற்கைக்கு மேம்பட்ட ஜீவன் வந்தது. அந்த கம்பீரமானவரின் பிரசன்னத்தால் காலை நேர சூரிய வெளிச்சம் போல அந்த அறையில் பிரகாசித்தது . அவர் உரத்த சத்தமாய் என்னிடம் பேசினார். "வா, பயப்படாதே நான் உன்னுடன் இருக்கிறேன். (அல்லேலூயா)" தெய்வீக சுகமளிப்பதின் செய்தியை, உலக மக்களுக்கு நீ எடுத்து செல்லவேண்டும்" என்றார். இதோ இந்த இடத்தில் ஜனங்கள் மத்தியில், அவர் அற்புதங்களை செய்கிறார், வியாதிகளை கூப்பிடுகிறார். முடவர்களையும், சேவிடர்களையும், ஊமையர்களையும் குணமாக்குகிறார். அவர் நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். தேவன் அவருடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? ஓ, அல்லேலூயா. அவர் இங்கே இருக்கிறார். அவர் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். வியாதியஸ்தர்களுக்கு, சுகம் கிடைக்கும் படியாக தேவன் தம்முடைய ஊழியக்காரர்களை எல்லா இடங்குகளுக்கும் அனுப்பி, அவர்களுக்காக ஜெபிக்கும்படி செய்கிறார். நான் அதை சரியாக இப்பொழுதே நம்புகிறேன்......தேவன் தம்முடைய பிரபஞ்சத்தில் இருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? தேவன் அவருடைய வார்த்தையில் இருக்கிறார் என்று நம்புகிறீர்களா? தேவன் அவருடைய குமாரனில் இருக்கிறார் என்பதை நம்புகிறீர்களா? அற்புதங்களையும் அடையாளங்களையும் காண்பித்து, அவருடைய ஜனங்களுக்குள் இங்கேயே தேவன் இருக்கிறார், என்பதை நம்புகிறீர்களா? அப்படி என்றால், அவரை நாம் ஏற்றுக் கொள்வோம். "தேவனை எங்களுக்கு காண்பியும், அது எங்களுக்கு போதும்." அவர் இங்கே இருக்கிறார். அவர் வியாதியஸ்தர்களுக்கு சுகத்தைத் தந்து கொண்டிருக்கிறார். முடவர்கள் நடக்கவும், குருடர் பார்வையடையவும், மற்றும் புற்று நோய்களும், காது கேளாதவர்களும், ஊமையர்களும், முடவர்களும், சுகம் பெற செய்கிறார். இப்போதே அற்புதங்களை செய்வதற்கு அவர் இங்கே இருக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? அந்த அடிப்படையில் அவரை நம்புங்கள். தேவன் இங்கே இருக்கிறார் என்பதை உங்களுக்கு நான் இப்பொழுது காண்பிக்கிறேன். தெய்வீக சுகம் அளிப்பதை நம்புகிற ஆறு அல்லது எட்டு, பரிசுத்த ஆவியினால் நிரம்பிய ஊழியக்காரர்கள், இங்கே ஒரு நிமிடம் வரும்படி அழைக்கிறேன் . 67. "பிதாவை எங்களுக்கு காண்பியும், அது போதும்? நல்லது, சகோதரன் மார்கம் இங்கே வாருங்கள். சரியாக அந்த வரிசையின் முடிவில் நீங்கள் நிற்குமாறு நான் உங்களை கேட்டுக் கொள்கிறேன். சகோதரனே, நீங்களும் அவருடன் அந்த வரிசையின் முடிவில் நின்றுக்கொண்டிருங்கள். அங்கே சரியாக அவருடன் நின்றுக் கொண்டிருங்கள். அந்த இரண்டு சகோதரர்களும், சரியாக இந்த வரிசையின் முடிவில் இருங்கள். தேவன் தம்முடைய ஜனங்களில் இருக்கிறாரா என்பதை இப்பொழுது பாருங்கள். சகோதரனே நேரே இங்கே வாருங்கள். நீங்கள் இரண்டு சகோதரர்கள் இந்த வரிசையின் முடிவில் இருங்கள். மேலும், மற்ற அந்த இரண்டு சகோதரர்கள் அங்கே இருக்கும் அந்த வரிசையின் முடிவில் இருங்கள். சகோதரனே, அந்த மற்றொரு வழியாக பார்த்தவாறு நில்லுங்கள் .இங்கே சரியாக நிற்கும் நீங்கள் இரண்டு பேரும் அந்த வழியை பார்த்தவாறு நில்லுங்கள். வரிசையின் முடிவில் நில்லுங்கள். அங்கே இருக்கும் இரண்டு சகோதரர்களே, அந்த பெண்மணி உட்கார்ந்து கொண்டு இருக்கும் இடத்திற்கு செல்லுங்கள். உங்கள் குழந்தையை பற்றி பயப்படாதிருங்கள் சகோதரியே. நல்லது சகோதரனே, சரியாக கீழே அந்த மற்றும் ஒரு வரிசையின் கடைசிக்கு, வெளியே வரும் இடத்திற்கு செல்லுங்கள். அந்த வரிசையின் கடைசியில் நில்லுங்கள். 68. தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? தேவன் என்னிடத்தில் உண்மையை கூறுகிறார் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? இந்த உண்மையை நான் சாட்சியாக உங்களுக்கு சொல்லி இருக்கிறேனா? இதோ தேவனுடைய தூதர் என்னிடத்தில் சொன்னதை நான் சொல்லுகிறேன். "ஜனங்கள் உன்னை நம்பும்படி நீ செய்வாயானால், மற்றும் நீ உண்மையாய் இருப்பா யென்றால், உன் ஜெபத்திற்கு முன்னாள் ஒன்றும் நிற்க முடியாது. இப்போதும் பார். சென்ற வாரம் இரண்டு அல்லது மூன்று பேர்களுக்கு பக்கவாதம் வந்து இங்கே நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் நடந்து சென்று விட்டனர். அன்றொரு இரவு, ஒரு கண் தெரியாதவள், அவளுடைய சிறு பையன் அந்த அறைக்குள் கூட்டி சென்றான் என்று சொன்னாள். மற்றும் பரிசுத்த ஆவியானவர் அவளை கூப்பிட்டார். அவள் கண் பார்வை அடைந்து, அந்த கட்டிடத்தை விட்டு பார்வை அடைந்து சென்றாள் என்று. புற்று நோய்க்கு மேல் புற்று நோய், மற்றும் செவிடர்கள் மற்றும் எல்லா விதமான நோய்களும் இங்கே சுகமாகிறது. அது சரிதானே? தேவன் இங்கே இருக்கிறார். பாவத்திற்கு அடுத்து பாவத்தை அழைக்கப்பட்டது, வியாதிக்கு அடுத்து வியாதி கூறப்பட்டது. மேலும் அந்த வரத்திற்கு முன்னாள் ஒன்றும் வந்ததில்லை. ஆனால் என்ன, அது சரியாக என்ன பேச வேண்டுமோ அதை சரியாக பேசியது. அது சரிதானே. அப்படி என்றால், தேவன் தம்முடைய ஜனங்களில் இருக்கிறார். அப்போது நான் உண்மையை தான் சொல்கிறேன் என்று என்னை நம்புங்கள். 69. இந்த கட்டிடத்தில் எத்தனை பேர்களுக்கு இப்பொழுதே தேவனிடத்தில் இருந்தது சுகம் கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? நான் சொல்லுகிறேன் தேவன் இந்த பிரசங்கிமார்களுக்குள் இருக்கிறார். தேவன் உங்களுக்குள் இருக்கிறார். தேவன் இப்பொழுது இங்கே இருக்கிறார். தேவன் உங்களை நேசிக்கிறார். நீங்கள் அதை நம்புகிறீர்களா? தேவன் என்னை நேசித்தார். நான் ஒரு சிறு பையனாக இருக்கும் போது தேவன் என்னை நேசித்தார். அவர் என்னை எல்லா நேரத்திலும் நேசித்தார். அவர் முந்தி காலத்தில் நான் பள்ளிக்கு வெறும் காலால் நடந்து செல்கையில், மற்றும் போட்டுகொள்வதற்கு வேறொன்றும் இல்லாமல் இருக்கையில், ஒரே ஒரு மேல் சட்டைடையை அணிந்து கொண்டு, ஒரு பக்கெட்டில் சாப்பிடுவதற்கு வெல்லமும், சோள ரொட்டியும் இருக்கும் போது அவர் என்னை நேசித்தார். தேவன் என்னை நேசித்தார். அன்று என்னை நேசித்தார். நான்.........இருக்கும் போது அவர் என்னை நேசித்தார். சரியா. தேவன் என்னை இப்பொழுது நேசிக்கிறார். இங்கே நின்றுக்கொண்டிருகிற அவரது சோர்ந்து போன ஊழியக்காரனை நேசிக்கிறார். அவர் என்னை நித்தியத்தில் நேசிக்கிறார். எல்லா சமுத்திரமும் .......வற்றிபோனாலும் அவர் நம்மை நேசிக்கிறார். (ஒலி நாடாவில் காலியிடம்). சந்திரனோ, சூரியனோ, நட்சத்திரங்களோ மற்றும் வேறு எதுவும் இல்லை என்றாலும் தேவனுடைய வார்த்தை மாறாதது. தேவனுடைய வார்த்தை என்றென்றைக்கும் நிலைத்து நிற்கும். அது உண்மை தானா? இந்த இரவு இது நடைபெறுவதற்காக, தேவன் தம்முடைய ஜனங்களுக்குள் இருக்கிறார். ஒவ்வொரு ஆணும், பெண் மணியும் தெய்வீக சுகம் பெற வேண்டும் என்று விரும்பினால், தேவனிடம் விசுவாசம் வைத்திருந்தால், இந்த நடு வழியில் நில்லுங்கள். உங்களுடைய ஜெப அட்டையோ அல்லது வேறு எதுவாகிலும் இருந்தால் அதை ஒரு பக்கமாக வைத்துவிட்டு....இந்த நடு பாதையில் நில்லுங்கள். அங்கேயே சரியாக நில்லுங்கள் வரிசையின் முடிவில் நில்லுங்கள். ஒவ்வொருவரும் உங்கள் முழு இருதயத்தோடும் என்னை நம்புங்கள். இந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு நோயாலியையும் சுகப்படுத்த, தேவன் இங்கிருக்கிறார் என்பதை என்னால் நிருபிக்கமுடியும். அற்புதமான கிருபையே! உமது தொனி, எத்தனை இனிமையானது அது பாதகன் போன்ற என்னையே மீட்டது! அன்று தொலந்திருந்த என்னை, இன்று இரட்சித்தது. குருடனான நான் இன்று காண்கிறேன். தேவனுடைய தூதன் இங்கிருக்கிறார். ஓ, என்னுடைய நண்பர்களே. உங்களுக்கு மட்டும் இந்த அசைவாடும் தேவனுடைய மகிமையான அபிஷேகத்தை பார்த்தும், உணர்ந்தும் இருப்பீர்கள் என்றால்? இந்த கூட்டம் நகரும் போது நான் ஜெபித்துக்கொண்டிருப்பேன், நான் அவர்களை கடந்து செல்கையில், பிரசங்கிமார்களே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் கரங்களை அவர்கள் மீது வைக்க கவனமாயிருங்கள். நீங்கள் இதை செய்ய வேண்டும் என்று வாஞ்சிக்கிறேன். நீங்கள் இதை கடந்து செல்கையில், ஒவ்வொருவரும் வரிசையில் நில்லுங்கள், தேவனால் அபிஷேகம் பெற்ற ஊழியக்காரர்கள் வியாதியஸ்தர் களுக்காகஜெபிப்பார்கள். நீங்கள் விசுவாசிக்கவேண்டும் என்று நான் வாஞ்சிக்கிறேன். எல்லா அவ்விசுவாசத்தையும் தூக்கி வீசிவிடுங்கள். உங்கள் காலடியில் போட்டு மிதித்து விட்டு, தேவனை மகிமை படுத்திக்கொண்டு இவ்விடம் விட்டு சென்றுவிடுங்கள்; ஏனென்றால் தேவன் ஒவ்வொருவரையும் சுகப்படுத்துவதற்காக இந்த கட்டிடத்தில் இருக்கிறார். நீங்கள் இதை நம்புகிறீர்களா? "ஆமென்" என்று சொல்லுங்கள். நல்லது, பிரசங்கிமார்களே நீங்கள் எங்கிருந்தாலும், இந்த கூட்டம் கடந்து செல்கையில், உங்கள் கரங்களை அவர்கள் மீது வையுங்கள். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் உங்களை அனுப்புகிறேன். கர்த்தர் தாமே இங்கிருக்கும் ஒவ்வொருவருக்கும், இப்பொழுதே சரீர சுகத்தை அருளுவாராக. நீங்கள் வரும் போது, அந்த சகோதரர்கள், சரியாக, வரிசையில் ஜெபித்துக்கொண்டிருக்கிறார்கள். சகோதரரே செல்லுங்கள். உங்கள் ஜெபத்தை துவங்குங்கள். ஜனங்கள் வரிசையில் வந்துகொண்டிருக்கிறார்கள். 71. நாம் தலைகளை வணங்கி இருக்கும் போது இந்த கட்டிடத்தில், எல்லா இடங்களிலும் இருக்கும் எல்லா கிறிஸ்தவர்களும், உங்கள் தலைகளை வணங்கி இருங்கள். மேலும் இந்த சின்ன ஜெப வரிசை நகர துவங்கும் போது, நான் இங்கே நின்றுகொண்டு, தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் சுகப்படுத்தும் படி வேண்டிக்கொள்வேன். தேவனே நாங்கள் ஜெபிக்கும் போது அதை இப்பொழுதே, அருள் செய்யும் . தலைகளை வணங்குங்கள். எங்கள் பரலோகத்தின் பிதாவே, உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நாங்கள் இங்கே கூடி இருக்கிறோம். ஓ நித்திய பிதாவே, ஜீவனுக்கெல்லாம் அதிபதியே ஆண்களும் பெண்களுமாக, ஜனங்கள் இந்த வரிசையில் சென்று கொண்டிருக்கிறார்கள். தேவன் இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறார் என்றும், தேவன் தம்முடைய வார்த்தையில் இருக்கிறார் என்றும், தேவன் தம்முடைய குமாரனில் இருக்கிறார் என்றும், தேவன் தம்முடைய ஜனங்களில் இருக்கிறார் என்றும் அறிந்த உம்முடைய ஊழியக்காரர்களும், விசுவாசிகளும் தேவனுடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் இங்கே நின்றுக்கொண்டிருக்கிறார்கள். தேவன் தம்முடைய உண்மையை, மகிமையான வெளிப்படுத்துதலின் மூலம் இங்கே பேசிக்கொண்டு, அதை எல்லாம் நிஜமாகிக் கொண்டிருக்கிறார். ஓ நித்திய பிதாவே, இப்பொழுதே உம்முடைய ஆசீர்வாதங்களை இந்த கூட்ட ஜனங்களுக்கு அனுப்பும். அவர்களை ஆசிர்வதியும், மற்றும் ஒவ்வொருவருக்கும் பரிபூரண சரீர சுகத்தை அருளும். சாத்தானே, இந்த கிறிஸ்தவர்களை கட்டி போட்டு இருக்கிற பாதாளத்தின் வல்லமை உடைய பிசாசே, நீ தேவனுடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், அந்த ஜனங்களை விட்டு வெளியே வா. அவர்களுடைய கட்டுகளை தளர்த்தி விட்டு அவர்களை விடுதலையாக்கு..........?.......... 52 SHOW US THE FATHER AND IT SUFFICES பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது போதும் 51